நகைச்சுவை நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்.. நெகிழ வைக்கும் ஆடியோ!

சென்னை: நகைச்சுவை நடிகர் கிங்காங்கிற்கு போன் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Recommended Video

Rajini ன் Surprise phone call | சந்தோஷத்தின் உச்சியில் நடிகர் King Kong | Adhisaya Piravi

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் இயக்கங்களில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

நெகிழ வைக்கும் ஆடியோ

ஆனாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், நகைச்சுவை நடிகர் கிங்காங்கை போனில் தொடர்பு கொண்டு பேசிய நெகிழ வைக்கும் ஆடியோ வைரலாகி வருகிறது.

வளர்ச்சி குன்றியவர்..

வளர்ச்சி குன்றியவர்..

தமிழ் சினிமாவில் நெத்தியடி திரைப்படம் மூலமாக அறிமுகமான நகைச்சுவை நடிகர் கிங்காங் என அழைக்கப்படும் நடிகர் சங்கர். இவர் வளர்ச்சி குன்றி சிறிய தோற்றத்துடன் காணப்படுவார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு..

10 ஆண்டுகளுக்கு முன்பு..

நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த அதிசய பிறவி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் பெற்ற விருதை ரஜினி கையால் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டார் கிங்காங்.

ரஜினியின் பார்வைக்கு..

ரஜினியின் பார்வைக்கு..

ஆனால் இந்த தகவல் ரஜினியை சென்று சேரவில்லை. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கிங்காங் இதனை கூறினார். இந்த வீடியோ தற்போது ரஜினியின் பார்வைக்கு சென்றுள்ளது.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

இதனை பார்த்து நெகிழ்ந்து போன ரஜினிகாந்த், உடனடியாக கிங்காகை போனில் தொடர்பு கொண்டு பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் விரைவில் சென்னை திரும்பியதும் நேரில் சந்திப்பதாகவும் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

உங்க வீடியோ பார்த்தேன்

உங்க வீடியோ பார்த்தேன்

ரஜினிகாந்த் நடிகர் கிங்காங்குடன் போனில் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது, வணக்கம் கிங்காங்.. எப்டி இருக்கீங்க.. உங்க வீடியோ பார்த்தேன்.. எனக்கு அனுப்பியிருந்தாங்க. நீங்க அவார்டு வாங்கி 10 வருஷமா என் கையில கொடுத்து வாங்க முயற்சி பண்றதா சொல்லியிருக்கீங்க.

ரொம்ப கஷ்டமா போச்சு

ரொம்ப கஷ்டமா போச்சு

எனக்கு இந்த விஷயம் தெரியவே இல்ல. யாரும் சொல்லல. வீடியோ பார்த்ததும் ரொம்ப கஷ்டமா போச்சு. சென்னையிலதான இருக்கீங்க.. நானும் ஊர்ல இருக்கேன். குவாரண்டைன்லாம் முடியட்டும். அடுத்த மாசம் டைம் சொல்றேன் நாம மீட் பண்ணலாம் கண்ணா. வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா? என அந்த ஆடியோவில் விசாரிக்கிறார் ரஜினிகாந்த்.

கொரோனா குறைந்ததும்

கொரோனா குறைந்ததும்

தொடர்ந்து கிங்காங்கின் அம்மாவும் அவரிடம் பேச ஆசைப்பட, அவரிடம் நலம் விசாரித்த ரஜினி, அவன எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா என்றும் கூறுகிறார். எனக்கு அந்த விஷயம் தெரியாது, யாரும் சொல்லவில்லை, கொரோனா கொஞ்சம் குறைந்ததும் நான் பார்க்கிறேன் என்றும் அன்புடன் கூறுகிறார்.

வெட்கப்படாம கேளுங்க கிங்காங்

வெட்கப்படாம கேளுங்க கிங்காங்

தொடர்ந்து கிங்காங்கிடம் பேசும் ரஜினி, பணம் ஏதாவது வேண்டும் என்றால் வெட்கப்படாமல் கேளுங்கள் கிங்காங் என்றும் வாஞ்சையோடு கூறியுள்ளார். மேலும் கிங்காங்கின் அம்மா ஆசைப்படி குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றும் அந்த ஆடியோவில் கூறியுள்ளார் ரஜினி. ரஜினியின் இந்த போன்கால் பேச்சால் செம ஹேப்பி மோடில் உள்ளது கிங்காங்கின் குடும்பம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X