கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கமலிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல் ஹாசனிடம் அவரது நண்பரான ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியல், சினிமா, தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல பணிகளில் ஈடுபட்டுள்ளார். ஒரு பக்கம் மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் கட்சி பணிகளில் தீவிரமாக உள்ளார்.

மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அதோ டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அமெரிக்கா சென்ற கமல்

அமெரிக்கா சென்ற கமல்

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், கடந்த 16ஆம் தேதியன்று, இந்திய கதர் ஆடைகளை பிரபலப்படுத்தும் வகையிலான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் வட அமெரிக்க குழு நிர்வாகிகளை சிகாகோவில், கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

காய்ச்சல் இருமல்

காய்ச்சல் இருமல்

அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய கமல்ஹாசனுக்கு உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டது. அதாவது லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்து வந்தது. இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் சென்னையை அடுத்த போரூரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதை கமல்ஹாசனே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

போனில் தொடர்புகொண்டு விசாரித்த ரஜினி

போனில் தொடர்புகொண்டு விசாரித்த ரஜினி

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசனிடம் நலம் விசாரித்துள்ளார். தொலைபேசியில் நடிகர் கமல் ஹாசனை தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X