கொரோனா 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்.. போட்டோவை ஷேர் செய்து அறிவித்த சவுந்தர்யா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களாக ஹைத்ராபாத்தில் நடைபெற்று வந்தது.

ஹைத்பாத்தில் ஷூட்டிங்
இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதீஷ், சூரி. உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி ஹைத்ராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

ரஜினிகாந்த் தடுப்பூசி
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த்
மருத்துவமனைக்கு சென்று நடிகர் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுள்ளார். ரஜினி தடுப்பூசி போட்டுக் கொண்ட போட்டோவை அவரது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

தலைவர் தடுப்பூசி போட்டார்
மேலும் அந்த போட்டோவுக்கு நம்முடைய தலைவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போரை ஒன்றாக எதிர்த்து போராடுவோம் என்று குறிப்பிட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ரஜினியும் தடுப்பூசி
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் தடுப்பூசி போட்டு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

இரண்டாவது டோஸ்
ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை எப்போது போட்டார் என்று தெரியவில்லை. இந்நிலையில் இன்று அவர் போட்டுக்கொண்டது கோவி ஷீல்டு இரண்டாவது டோஸ் என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











