Rajinikanth: அபுதாபியின் பாப்ஸ் இந்து மந்திர்.. வழிபாடு செய்த ரஜினிகாந்த்.. வெளியான புகைப்படங்கள்!
அபுதாபி: நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தற்போது அங்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் முக்கியமான நபர்களை சந்தித்து வருகிறார். தற்போது அபுதாபியில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இரு படங்களுக்கு இடைப்பட்ட கேப்பில்தான் தற்போது அவர் அபுதாபி சென்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்தது. படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த சூழலில் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய்களை கடந்து படம் வசூலித்திருந்தது. இந்நிலையில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த லால் சலாம் படம் கடந்த பிப்ரவரியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் ரஜினி நடித்திருந்தார்.
ரஜினிக்கு கோல்டன் விசா: இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ள ரஜினிகாந்த், வேட்டையன் படத்தில் நடித்து முடித்த கையுடன் கூலி படத்தில் இணைவதற்கு முன்னதாக கிடைத்த சிறிய இடைவெளியில் தற்போது அபுதாபி சென்றுள்ளார். ரஜினிகாந்த்திற்கு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கோல்டன் விசா அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோல்டன் விசாவை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த், தன்னுடைய நன்றிகளை தெரிவித்து சில தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டிருந்தார்.

பாப்ஸ் இந்து மந்திரில் சாமி தரிசனம்: இந்நிலையில் அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாப்ஸ் ஹிந்து மந்திர் இந்து கோயிலுக்கு சென்று ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்து வழிபட்டுள்ளார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வருகின்றன. முன்னதாக தனக்கு கோல்டன் விசா கிடைக்க காரணமான கேரளாவை சேர்ந்த லுலு குடும்பத்தின் மேலாண்மை இயக்குனர் யூசுப் அலியை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகனாக இருப்பார்.
ரஜினிக்கு உற்சாக வரவேற்பு: இந்நிலையில் பாப்ஸ் இந்து கோயிலை பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். மேலும் அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயித் பள்ளி வாசலையும் நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அடுத்த மாதத்தில் கூலி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், இன்னும் சில தினங்கள் அவர் அபுதாபியில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











