Rajinikanth: பாபாஜி குகைக்கு பயணம்.. கரடுமுரடான பாதையில் நடந்து சென்ற ரஜினிகாந்த்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 600 கோடி ரூபாய்களை சர்வதேச அளவில் வசூலித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் வரும் 10ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார். இதனிடையே தற்போது அவர் இமயமலையில் ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இது குறித்து அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அதிகமாக நேசிக்கும் விஷயங்களில் நடிப்பு மட்டுமில்லாமல் ஆன்மீகமும் ஒன்றாக உள்ளது. தொடர்ந்து 73 வயதிலும் சுறுசுறுப்பாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதற்கு முக்கியமான காரணம் அவர் நடிப்பை நேசிப்பது தான். துவக்கம் முதலே தன்னுடைய நடிப்பில் ஸ்டைல், மாஸ் உள்ளிட்டவற்றை புகுத்தி வந்த ரஜினிகாந்த், இந்த வயதிலும் ஏராளமான ரசிகர்களை கவரும் வகையில் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்து ஜெயிலர் என்ற மாஸ் ஹிட் படம் கொடுத்திருந்தார்.
அடுத்தடுத்த படங்கள்: கடந்த பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய மகள் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 10ம் தேதி முதல் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் ஷூட்டிங்கில் இணைய உள்ளார் ரஜினிகாந்த். இதனிடையே வேட்டையன் மற்றும் கூலி படங்களுக்கு இடையில் கிடைத்துள்ள ஓய்வை அவர் தன்னுடைய ஆன்மீக பயணத்தில் செலவிட்டு வருகிறார்.
பாபா குகையில் பயணம்: தற்போது இமயமலையின் பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வரும் ரஜினிகாந்த், அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் பாபா குகைகளில் அவர் கடினமான பாதைகளில் நடந்து செல்வதை பார்க்க முடிந்தது. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் கூலி படத்தின் சூட்டிங் துவங்க உள்ள சூழலில் அதற்கு முன்னதாகவே ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூலி படம்: கூலி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் இதுவரை இல்லாத அளவில் அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் அவர் தோன்ற உள்ளதாகவும் முன்னதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ப்ரோமோ முன்னதாக வெளியாகி மாஸ் காட்டியுள்ளன. இந்த படம் ரஜினியின் கேரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











