இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு சென்ற ரஜினி.. கோவிலுக்குள் வந்ததுபோல் உள்ளது என நெகிழ்ச்சி!

சென்னை: இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் கோவிலுக்குள் வந்தது போல் உள்ளதாக பாராட்டியுள்ளார்.

Recommended Video

புதிய Studio-வில் தொடங்கியது Ilayaraja-வின் இசைப்பணி | Tamil Filmibeat

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக கோலொச்சி வருபவர் இளையராஜா.

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

35 ஆண்டுகளுக்கும் மேலாக..

35 ஆண்டுகளுக்கும் மேலாக..

7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, பத்ம விருதுகள் உட்பட ஏராளமனா விருதுகளை குவித்துள்ளார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் செய்து வந்தார் இளையராஜா.

நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

ஆனால் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ஸ்டுடியோவுக்குள் இருந்த இளையராஜாவுக்கு சொந்தமான உடைமைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இளையராஜா ஸ்டுடியோ

இளையராஜா ஸ்டுடியோ

இந்நிலையில் தியாகராயநகரில் உள்ள எம்எம் தியேட்டரை தனது ரெக்கார்டிங்க ஸ்டுடியோவாக மாற்றியுள்ளார் இளையராஜா. சொந்தமாக தொடங்கியுள்ள ஸ்டுடியோவில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கும் படத்தின் இசைப் பணிகளை தொடங்கியுள்ளார்.

ரஜினி விசிட்..

ரஜினி விசிட்..

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், நேற்று இளையராஜாவின் தி நகர் வீட்டுக்கு சென்றார். அவருடன் நீண்ட நேரம் உரையாடியுள்ளார் ரஜினி. பின்னர் இளையராஜா திறந்துள்ள அவரது சொந்த ஸ்டுடியோவுக்கும் சென்றார் ரஜினிகாந்த்.

கோவிலுக்குள் வந்ததுபோல்

கோவிலுக்குள் வந்ததுபோல்

ஸ்டுடியோவை சுற்றி பார்த்த ரஜினிகாந்த் கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக பாராட்டி இருக்கிறார். பின்னர் ஸ்டுடியோவில் நடக்கும் பின்னணி இசைப்பணிகளை பார்வையிட்ட நடிகர் ரஜினி, அங்கேயும் அவருடன் நேரத்தை செலவழித்துவிட்டு சென்றுள்ளார்.

அண்ணாத்த படப்பிடிப்பு..

அண்ணாத்த படப்பிடிப்பு..

ரஜினிகாந்துக்காக சில பாடல்களை இளையராஜா இசையமைத்து காட்டியுள்ளார். இந்த போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் ஹைத்ராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

பூமி பூஜையில்..

பூமி பூஜையில்..

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்த ரஜினி கடந்த வாரம் போயஸ்கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டின் பூமி பூஜையில் பங்கேற்றார். அதன்பிறகு தற்போது இளையராஜாவின் வீடு மற்றும் ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X