போயஸ் கார்டன் தெருவில் படு வேகமாக நடந்து போறாரே.. அது யாரு.. ரஜினியா.. வைரல் வீடியோ!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் தெருக்களில் வாக்கிங் செல்வது போன்ற வீடியோ ஒன்று திடீரென வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் தடம் பதித்து 5 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கடந்த மாதம் காமன் டிபி வெளியிட்டு விமர்சையாக கொண்டாடினர்.

அண்ணாத்த
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் என ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.

ஷுட்டிங் இல்லை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் அமலில் உள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ் சினிமாவில் பெரிதாக எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இதனால் நடிகர்கள் நடிகைகள் வீடுகளிலேயே முடங்கினர்.

சவுந்தர்யா வீட்டில்
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம், போயஸ் கார்டன் வீட்டில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தப்படி தானே காரை ஓட்டிச் சென்றார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. காரில் ரஜினி எங்கே சென்றார் என்ற கேள்வி எழுந்த நிலையில் கேளம்பாக்கத்தில் உள்ள தனது இளையமகள் சவுந்தர்யா வீட்டிற்குதான் சென்றார் என தெரிந்தது.

வாக்கிங் வீடியோ
கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் மகள், மருமகன் மற்றும் பேரனுடன் சில நாட்கள் ஓய்வெடுத்த ரஜினிகாந்த் தனது வீட்டின் பண்ணை தோட்டத்தில் வாக்கிங் செல்லும் வீடியோ வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் எவ்வளவு வேகமாக நடக்கிறார் என கூறி ஆச்சரியப்பட்டனர்.

தலையில் தொப்பியுடன்..
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இம்முறை போயஸ் கார்டன். போயஸ் கார்டன் தெருக்களில் அதிகாலை வேளையில் தலையில் தொப்பி அணிந்தபடி வாக்கிங் செல்கிறார் ரஜனிகாந்த்.

எப்போது எடுக்கப்பட்டது?
இந்த வீடியோவில் சற்று எடை கூடியது போல் உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியாத நிலையில், இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 70 வயதிலும் எவ்வளவு துடிப்புடன் இருக்கிறார் என புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











