சீக்கிரம் படத்த ரெடி பண்ணுங்க.. பேரன் தொல்ல தாங்கல.. சிவாவிடம் அவசரப்பட்ட ரஜினி.. வைரலாகும் வாய்ஸ்!
சென்னை: தனது பேரன் படுத்திய பாட்டால் அண்ணாத்த படத்தை சீக்கிரம் ரெடி பண்ணுமாறு இயக்குநர் சிவாவை அவசரப்படுத்தியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜகபதி பாபு, சதீஷ், சூரி, சத்யன், வேல ராமமூர்த்தி, பிரகாஷ் ராஜ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அண்ணாத்த படம் பார்த்த ரஜினி
இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அண்ணாத்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன் மற்றும் குடும்பத்தினருடன் நேற்று பார்த்துள்ளார்.

எப்போ தாத்தா காட்டுவீங்க
இதுதொடர்பாக ஹுட் ஆப்பில் வெளியிட்டுள்ள வாய்ஸ் நோட்டில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, அண்ணாத்த டீசர் வெளியானதில் இருந்தே என் மூன்றாவது பேரன் வேத் படத்தை எப்போ தாத்தா காட்டுவீங்கள் ஒரு நாளைக்கு 10, 20 முறை கேட்டு விடுவான்.

சிவாக்கிட்ட சீக்கிரம் காட்ட சொன்னேன்
இதுக்காகவே சிவா சார்க்கிட்ட படத்தை சீக்கிரம் காட்டுங்க பேரன் தொல்லை தாங்கல என் சொன்னேன். நீங்க டெல்லி போயிட்டு வாங்க வந்ததும், காட்டுகிறேன் என்றார். டெல்லி போயிட்டு வந்ததும் படம் ரெடியா இருக்குன்னு சொன்னாங்க, 27ஆம் தேதி சத்யம் சினிமாஸ்ல ஷோ பிக்ஸ் பண்ணாங்க.

அந்த பேரனுங்களுக்கு தெரியாது
இது என்னுடைய இன்னும் ரெண்டு பேரணுங்க யாத்ரா, லிங்காவுக்கு தெரியாது. அவங்க அப்பா கூட கொடைக்கானல்ல இருக்காங்க. விட்டுட்டு படம் பாக்குறோம் சொன்னா விடமாட்டாங்க.. அதனால அவங்களுக்கு சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன். என் மனைவி மகள்கள், என் மாப்பிள்ளை விசாகன், என் சம்மந்திங்களோட வந்து இந்த படம் பார்த்துருக்கேன்.

தாத்து தாத்துன்னு சொல்வான்
வேத் என் பக்கத்துலேயே உட்காந்து பாக்கணும் சொல்லி பார்த்துருக்கான். இது அவன் பார்க்கிற என்னோட ஃபர்ஸ்ட் படம்.. வாழ்க்கையிலேயே மறக்கமாட்டான். படம் பார்த்ததும் 3, 4 நிமிஷம் கட்டிப்பிடிச்சு விடவே இல்லை. அவ்ளோ சந்தோஷம்.. அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தா தாத்து தாத்துன்னு சொல்வான். தாத்து தாத்து ஐ அம் ஸோ ஹேப்பி.. ன்னு சொன்னான். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

மேன் மக்கள் மேன் மக்களே
படம் முடிஞ்சு வெளியே வந்தா எனக்கு ஷாக்கிங் கலாநிதி மாறன் சார் வெளியே நிக்கிறாரு. என்ன சார் நீங்க வந்திருக்கிங்க என்றேன். என்னை பார்க்கணும் என்றார். அவ்ளோ பெரிய மனுஷன், அவ்ளோ பிஸி, வரணும்னு அவசியம் இல்லை.. எப்போதும் மேன் மக்கள் மேன் மக்களே.. நன்றி.. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தனது வாய்ஸ் நோட்டில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











