twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்பிபிக்கான கூட்டுப்பிரார்த்தனையில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்.. அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு!

    |

    சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் நலம்பெற வேண்டி இன்று மாலை நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

    Recommended Video

    பாலுவுடனான எனது உறவு சினிமாவுக்கு அப்பாற்பட்டது.. தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி உருக்கம்!

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் கடந்த 13ஆம் தேதி முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    ஐசியுவில் உள்ள அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்களால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    எஸ்பிபிக்காக இன்று மாலை வைரமுத்து ஒலிக்கவிடப் போகும் பாடல் இதுதான்.. டிவிட்டரில் அறிவிப்பு! எஸ்பிபிக்காக இன்று மாலை வைரமுத்து ஒலிக்கவிடப் போகும் பாடல் இதுதான்.. டிவிட்டரில் அறிவிப்பு!

    இயற்கை அன்னை

    இயற்கை அன்னை

    அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கடந்த 13ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் உள்ள எஸ்பிபி ரசிகர்கள், இயற்கை அன்னையையும் இறைவனையும் பிரார்த்தித்து வருகின்றனர்.

    மவுன பிரார்த்தனை

    மவுன பிரார்த்தனை

    இந்நிலையில் எஸ்பிபி குணமடைய வேண்டி இன்று மாலை 6 மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை நடைபெறுகிறது.
    அப்போது எஸ்பி பாலசுப்ரமணியம் நலம் பெற வேண்டி 2 நிமிட மவுன பிரார்த்தனையும், எஸ்பிபியின் குரலில் ஒலித்த பாடலும் ஒலிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த்

    இந்த கூட்டுப் பிரார்த்தனையில் இளையராஜா, வைரமுத்து உட்பட திரைத்துறை பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் எஸ்பிபிக்கான கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

    பாடும் நிலா.. எழுந்துவா!

    பாடும் நிலா.. எழுந்துவா!

    இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பாடும் நிலா.. எழுந்து வா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்... எஸ்பிபியை மீட்டெடுப்போம்! இன்று மாலை 6 மணி முதல் 6.5 மணி வரை.. என குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Actor Rajinikanth will be participating in Mass prayer for SPB. SP Balasubramaniyam is in critical condition in hospital.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X