Rajinikanth: நண்பர் மகன் படத்திற்கு வாழ்த்து சொன்ன சூப்பர்ஸ்டார்..அட நெல்சனும் ஜாய்ன் ஆகியிருக்காரே!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் 700 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
அடுத்ததாக ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் வரும் ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலை170 படத்தில் இணைந்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் கேரளாவில் நடந்துள்ளது.
நண்பர் மகன் படத்திற்கு வாழ்த்து சொன்ன சூப்பர்ஸ்டார்: நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 70வது வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் ஜெயிலர் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்நது 700 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. நெல்சன் திலீப்குமார் இயக்க்ததில் வெளியான இந்தப் படத்தில் ரஜினி ரிடையர்ட் ஜெயிலராக நடித்திருந்தார். படத்தில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தன்னுடைய மகனுக்காக, அவரது கடத்தலையொட்டி பழிவாங்க களமிறங்கும் ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் தன்னுடைய மகன் குறித்த உண்மை தெரியவரும நிலையில் எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பதாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. தன்னுடைய வயதிற்கு ஏற்ற கேரக்டரில் இந்தப் படத்தில் நடித்ததாலோ என்னவோ ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினர். மேலும் படத்தின் திரைக்கதை மற்றும் கேரக்டர்களும் படத்திற்கு பலம் சேர்த்திருந்தனர்.
அடுத்ததாக தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏறக்குறைய ஒரு மாத காலங்கள் எடுக்கப்பட்டிருந்தன. மும்பை, சென்னை, திருவண்ணாமலை போனற் இடங்களில் ரஜினி சம்பந்தபட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தின் டப்பிங்கையும் நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த், தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர்170 படத்தில் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர்171 படத்தின் சூட்டிங்கில் வரும மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது லியோ படத்தை முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தலைவர் 171 படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
PHOTOS: நயன் முதல் ஹன்சிகா வரை.. அதிர்ஷ்ட மச்சம் உடைய நடிகைகள்.. பிரபலமானத்துக்கு அது தான் காரணமோ?
இதனிடையே சமீப காலங்களில் மற்ற நடிகர், நடிகைகள், இயக்குநர்களின் படங்களை நேரிலோ, சமூக வலைதளங்களிலோ பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ரஜினிகாந்த். அந்த வகையில் சமீபத்தில் விஜய்யின் லியோ படம் வெற்றிபெற தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் தனது நண்பர் ஜாக்கி ஷெராப் மகன் டைகர் ஷெராபின் கணபத் படம் வெற்றிபெற தனது வாழ்த்துக்களை ரஜினி பகிர்ந்துள்ளார். இதையடுத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் டைகர் ஷெராபின் கண்பத் படம் வெற்றிபெற வாழ்த்துக்கைள பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











