Rajinikanth: கூலி படத்தோட அடுத்தக்கட்ட ஷெட்யூல் எப்ப எங்க தெரியுமா?.. சூப்பர்ஸ்டார் ரஜினி இல்லாமலா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி திரையரங்குகளில் தொடர்ந்து 12வது நாளாக ரசிகர்களை கவர்ந்து ஓடி வருகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருந்தது.

படத்தின் கதைக்களத்தை ரஜினியின் மாஸ் குறையாதவண்ணம் கொடுத்திருந்தாலும் தன்னுடைய ஸ்டைலில்தான் இந்தப் படத்தை கொடுத்திருந்தார் இயக்குநர் டிஜே ஞானவேல். இதனிடையே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தன்னுடைய உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக அவர் ஓய்வில் உள்ளார். இதனால் கூலி சூட்டிங்கில் அவர் பங்கேற்கவில்லை.

rajinikanth coolie movie lokesh kanagaraj

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த், 73 வயதிலும் மிகவும் சுறுசுறுப்புடன் அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். இளம் இயக்குநர்களுடன் அடுத்தடுத்து கூட்டணி அமைத்து வருகிறார். அவரது இந்த தேர்வு அவருக்கு சிறப்பாகவே அமைந்து வருகிறது. கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தில் ரஜினி இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது நெல்சன் திலீப்குமார் பிசி. இதனிடையே, கடந்த 10ம் தேதி ரஜினிகாந்த் -டிஜே ஞானவேல் கூட்டணியில் வெளியான வேட்டையன் படமும் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது.

வேட்டையன் படம்: படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதிலும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி வெளியான இந்தப் படம் கடந்த 11 நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 239 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டுமே கடந்த 11 நாட்களில் இந்தப் படம் 99 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. லைகா நிறுவன தயாரிப்பாக வெளியான இந்தப் படம் தயாரிப்பு தரப்பிற்கு சிறப்பான லாபத்தை பெற்றுத் தந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

கூலி அடுத்தக்கட்ட சூட்டிங்: இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடந்துவந்த நிலையில், இடையில் உடல்நலக் குறைவு காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர் மருத்துவர்கள் பரிந்துரையின்படி தன்னுடைய வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதனிடையே நாளை முதல் மீண்டும் கூலி படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் நாளை முதல் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் ரஜினிகாந்தும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள்: நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளன. இந்தப் படத்தில் LCU இருக்காது என்று முன்னதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ள நிலையில், படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ள கூலி படத்தில் தங்கக் கடத்தலை மையமாக கொண்டு கதைக்களத்தை லோகேஷ் கனகராஜ் அமைத்துள்ளார். படத்தில் அதிகமான அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அமையவுள்ளதாக அவர் முன்னதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X