ரஜினிகாந்தின் கூலி பட ரிலீஸ் தேதியை இறுதி செய்த தயாரிப்பு தரப்பு.. இத்தனை மாசம் காத்திருக்கனுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். முன்னதாக விஜய்யின் லியோ படத்தை இயக்கியிருந்த லோகேஷ் கனகராஜ், அந்த படத்தையொட்டி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது கூலி படத்தின் திரைக்கதையை மிகவும் ஷார்ப்பாக அவர் வடிவமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டிலேயே இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் விரைவில் சூட்டிங் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

rajinikanth coolie movie lokesh kanagaraj


நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் காம்பினேஷனில் உருவாகி வருகிறது கூலி படம். இந்த படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கூலி படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. படத்தில் ரஜினிகாந்துடன் நீண்ட காலங்களுக்குப் பிறகு இணைந்துள்ளார் சத்யராஜ்.

இறுதிக்கட்டத்தில் கூலி பட சூட்டிங்: இதே போல ரஜினிகாந்துடன் முதல் முறையாக இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இவர்களின் காம்பினேஷன் சிறப்பாக பார்க்கப்படுகிறது. தங்கக் கடத்தலையும் மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ள நிலையில், கடந்த படங்களைப் போலவே இந்த படத்திலும் மாஸான காட்சிகளை லோகேஷ் கனகராஜ் இணைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டில் துவங்கப்பட்ட நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ்?: இந்நிலையில் இந்த படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் விரைவில் படக்குழுவினர் ஈடுபட உள்ளனர். இதனிடையே எப்போதும் ரஜினிகாந்த்திற்கு சிறப்பான பாடல்களை கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களும் ரஜினியின் எவர்கிரீன் ஃபேவரிட் லிஸ்ட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் அடுத்தடுத்த சூட்டிங் ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம், பாங்காக் போன்ற இடங்களிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி கொண்டாட்டம்?: முன்னதாக படம் மே 1ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மறுபுறம் இந்தப் படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாகவும் இதன்மூலம் அதிகமான வசூலை பெற தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுவாக இருந்தபோதிலும் தயாரிப்பு தரப்பு விரைவில் இதை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X