Rajinikanth: அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போகும் 'கூலி' பட சூட்டிங்.. என்ன இப்படி ஆகி போச்சே!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து படம் வரும் அக்டோபர் மாதத்தில் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் 10ம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் துவங்கவுள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக இந்த படம் ரிலீசாகவுள்ளதாகவும் முன்னதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ப்ரோமோ முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதையடுத்து படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கும் உள்ளாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் சூட்டிங்கை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார். டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் தீபாவளியையொட்டி வரும் அக்டோபர் மாத இறுதியில் ரிலீசாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் மிகப்பெரிய விலைக்கு விற்றுத் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூலி படம்: இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்டிருந்த சூழலில் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போனது. இந்நிலையில் இந்த படத்தின் சில முன் தயாரிப்பு பணிகள் இன்னும் நிறைவடையாததால் படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் துவங்கும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ப்ரமோ முன்னதாக வெளியாகி மாஸ் காட்டியது.
கோடை கொண்டாட்டம் 2025: கூலி படம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ளதாக லோகேஷ் கனகராஜ் முன்னதாக தெரிவித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் லோகேஷ் முன்னதாக கூறியிருந்தார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது. படம் கோடை கொண்டாட்டமாக அடுத்த ஆண்டில் ரிலீசாக உள்ளதாகவும் தன்னுடைய முந்தைய படமான லியோ போல கமிட்மெண்டுடன் இந்த படத்தை உருவாக்காமல் மிகவும் ரிலாக்ஸாக உருவாக்க உள்ளதாகவும் லோகேஷ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் கேள்வி: இந்த படம் தொடர்ந்து சூட்டிங் தள்ளிப் போவதால் படத்தின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் ஏற்படுமா என்று ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். கூலி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே ஒரு படத்தில் அவர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல வேல்ஸ் நிறுவனத்திற்காகவும் அவர் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க 250 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











