Actor Rajinikanth: ஐதராபாத்தில் துவங்கிய கூலி பட சூட்டிங்.. ரஜினிகாந்துடன் இணைந்த பிரபல நடிகை!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் இன்றைய தினம் துவங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இதன் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில் நேற்றைய தினமே நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் புறப்பட்டு சென்ற விமான நிலைய வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.
இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அப்டேட்டை விரைவில் லோகேஷ் கனகராஜ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இன்றைய தினம் தொடங்கியுள்ள சூட்டில் ரஜினிகாந்துடன் சுருதிஹாசன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தின் ஷூட்டிங் இன்றைய தினம் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டிலேயே கூலி படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேற்கொண்டிருந்தது. ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு கூலி என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் முன்னதாக இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பிரமோ ஆகியவற்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இவை இரண்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏராளமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. படத்தின் சூட்டிங் கடந்த மாதமே துவங்கவிருந்த நிலையில், வேட்டையன் படத்தின் டப்பிங் வேலைகளில் ரஜினி பிஸியாக இருந்ததால் இந்த படத்தின் சூட்டிங் இந்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
துவங்கியது கூலி பட சூட்டிங்: இந்நிலையில் இன்றைய தினம் ஐதராபாத்தில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில், நேற்றைய தினமே விமானம் மூலம் ரஜினிகாந்த், ஹைதராபாத் சென்றதை பார்க்க முடிந்தது. இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்க உள்ளதாகவும் இதையடுத்து 2வது கட்ட ஷூட்டிங் சென்னையில் வரும் 10ம் தேதி துவங்க உள்ளதாகவும் இதற்கான பிரம்மாண்டமான செட்டுகள் அமைக்கும் பணிகள் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர்.
அதிகமான ஆக்ஷன் காட்சிகள்: கூலி படத்தில் நடிகர் சத்யராஜ் நீண்ட காலங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் விரைவில் படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்த படத்தில் இன்றைய தினம் நடிகை ஸ்ருதிஹாசனும் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் நெகட்டிவ் ஷேடில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகள் அதிகமாக உள்ளதாக முன்னதாக லோகேஷ் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். படத்தின் ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
வேட்டையன் படம்: கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில் முன்னதாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் மாஸ் காட்டிய அனிருத் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு சூப்பரான இசையை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கூலி படமும் விரைவில் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











