அடுத்த மாதம் துவங்கும் ரஜினிகாந்தின் கூலி பட சூட்டிங்.. லோகேஷின் சூட்டிங் பிளான் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தின் சூட்டிங் இம்மாதம் துவங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் அடுத்தடுத்து வேட்டையன் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்ததால் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டி இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்தை அதிகமாக அலைக்கழிக்காமல் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மட்டுமே இந்த படத்தை ஒட்டுமொத்த சூட்டிங்கையும் எடுத்து முடிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 70 வயதை கடந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இந்த வயதிலும் சுறுசுறுப்பாக தன்னுடைய பட ஷூட்டிங்குகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது சுறுசுறுப்பு அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்து வருகிறது.

Rajinikanth Coolie movie Vettaiyan movie Lokesh kanagaraj tamil cinema

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்/ 70 வயதை கடந்த நிலையிலும் அவரது சுறுசுறுப்பை பார்த்து ரசிகர்கள் மற்றும் உடன் நடித்து வரும் நடிகர்கள் அனைவருமே சிலாகித்து பேசுவதை பார்க்க முடிகிறது/ கடந்த ஆண்டில் நெல்சன் திலிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து 600 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் ரஜினி கேமியோ கேரக்டரில் நடித்திருந்த லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

கூலி படம்: இந்நிலையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்துக் கொடுத்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு அடுத்தடுத்து பல இடங்களில் ஷூட்டிங் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் மிகவும் சோர்வடைந்துள்ளதாகவும் அதனால் தான் படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொள்ளவும் தாமதப்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாகவே ஜூன் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் துவங்கவிருந்த கூலி படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய இமயமலை பயணம் உள்ளிட்டவற்றை ரஜினிகாந்த் முடித்துள்ளார்.

லோகேஷ் பிளான்: இந்நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கூலி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் இந்த படத்தில் ரஜினிகாந்தை அளவுக்கு அதிகமாக அலைகழிக்காமல் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மட்டுமே படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அதிகமான அதிரடி ஆக்சன் காட்சிகளை லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ள நிலையில் ரஜினிகாந்தை அதிகமாக சிரமப்படுத்தாமல் இந்த காட்சிகளை எடுத்து முடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

தள்ளிப்போன சூட்டிங்: முன்னதாக இந்தப் படத்தின் ஸ்கிரிப்டில் ரஜினிகாந்த் சில மாற்றங்களை சொன்னதாகவும் அதுவும் சூட்டிங் தாமதத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஜூன் மாதத்திலேயே ஒரு நாள் இந்தப் படத்தின் சூட்டிங்கை மேற்கொள்ள ரஜினி கூறியதாகவும் கூறப்பட்ட நிலையில், அதுவும் நடக்காத நிலையில், அடுத்த மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகவுள்ள நிலையில், அனைத்தையும் சரியான திட்டமிடலுடன் லோகேஷ் அணுகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X