Coolie: ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் அப்டேட்டை விடுங்க.. கூலி படத்தின் தற்போதைய அப்டேட்டை பார்க்கலாமா
ஜெய்ப்பூர்: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தப்படமாக உருவாகிவருகிறது கூலி. 70 வயதை கடந்த நிலையிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் அடுத்தடுத்து ஜெயிலர், லால் சலாம், வேட்டையன் படங்கள் வெளியான நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, விசாகப்பட்டினம், ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் வட இந்தியாவிற்கு சென்றுள்ளனர். வரும் 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் அதிரடி அப்டேட் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் இளம் இயக்குநர்களுடன் கைகோர்த்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட்டை அவருக்கு கொடுத்தது. சன் பிக்சர்சுக்கும் இந்தப் படம் சிறப்பாக அமைந்த நிலையில் அடுத்ததாக ஜெயிலர் 2 படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தற்போது ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வரும் 12ம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே ரஜினிகாந்த் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்.
கூலி படம்: இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அப்டேட்டும் ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ள படம் குறித்தும் அவரது பிறந்தநாளிலேயே அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது கூலி படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. சென்னை, விசாகப்பட்டினம் போன்ற இடங்களை தொடர்ந்து அடுத்ததாக ஜெய்ப்பூரில் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் அதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரஜினியுடன் இணையும் அமீர்கான்?: இந்தப் படத்தில் நடிகர் அமீர்கான் கேமியோ கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் சூழலில், ஜெய்ப்பூர் சூட்டிங்கில் அவரும் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கூலி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில் விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் -விஜய் கூட்டணியில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அதை கவனத்தில் கொண்டு கூலி படத்தை இயக்கி வருவதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நட்சத்திர பட்டாளம்: ஜெயிலர் படம் போலவே இந்தப் படத்திலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை இணைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் நாகார்ஜுனா, அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளது படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வரும் 12ம் தேதி இந்தப் படத்தின் எந்த மாதிரியான அறிவிப்பு வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரஜினி நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான லால் சலாம், வேட்டையன் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வேட்டையன் படம் அதிரிபுதிரி வசூலை குவித்துள்ளது. இதனிடையே, கூலி படம் அவருக்கு அடுத்த ஆண்டில் சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











