Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் டீசர் இன்றைய தினம் வெளியாகவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.

இதையடுத்து படத்தின் டைட்டில் குறித்த பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தன. கோல்ட், ராணா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் யூகங்களாக வெளியான நிலையில், இன்று மாலை டைட்டில் டீசருடன் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு கூலி என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் டீசரும் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்துள்ளது.

Actor Rajinikanth s Coolie movie title teaser gets 1 million views in just one hour

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ளது தலைவர் 171 படம். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஏப்ரல் மாதத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட சூழலில் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் 5 -6 மாதங்களை எடுத்துக் கொண்டதால் தற்போது சூட்டிங் ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.

மாஸான இசை: முன்னதாக சென்னையில் தங்கியிருந்து படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை மேற்கொண்ட லோகேஷ் கனகராஜ், தற்போது தன்னுடைய டீமுடன் மங்களூருக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த வேலைகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பவுள்ள லோகேஷ், அடுத்ததாக சூட்டிங்கிற்கான வேலைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜெயிலர் உள்ளிட்ட ரஜினியின் படங்களுக்கு சிறப்பான இசையை கொடுத்துள்ள அனிருத் இந்தப் படத்திற்கும் அதே போன்ற எஃபர்ட்டை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள டைட்டில் டீசரிலும் அவரது உழைப்பு வெளிப்பட்டுள்ளது.

ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்: தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் 6 மணியளவில் வெளியான சூழலில், வெளியாகி ஒரே மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்களை பெற்றிருந்தது. தொடர்ந்து ரசிகர்கள் இந்த டீசரை கொண்டாடி வருகின்றனர். படத்தின் சூட்டிங்கை எந்தவித அழுத்தமும் இல்லாமல் ரிலாக்ஸ்டாக இயக்கவுள்ளதாகவும் தன்னுடைய விஷனில் ரஜினியை நினைத்துள்ளபடி படத்தை இயக்கவுள்ளதாகவும் லோகேஷ் முன்னதாக தெரிவித்துள்ளார். தான் கமலின் ரசிகராக மாறுவதற்கு முன்பு, ரஜினியை கொண்டாடியுள்ளதாகவும் அவரது படங்களை FDFS பார்த்து வளர்ந்துள்ளதாகவும் லோகேஷ் முன்னதாக பேட்டியொன்றில் கூறியுள்ளார்.


எக்ஸ்பிரிமெண்ட் படம்: கூலி படம் கண்டிப்பாக எக்ஸ்பிரிமெண்ட் படமாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ள நிலையில் அடுத்த ஆண்டில்தான் படம் ரிலீசாகவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். படத்தில் ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா உள்ளிட்ட நடிகர்கள் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பை லோகேஷ் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். லோகேஷின் முந்தைய படங்களின் டீசருக்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்ததை போலவே, இந்தப் படத்தின் டைட்டில் டீசருக்கும் படத்திற்கும் சம்பந்தம் இருக்குமா என்ற கேள்வியும் தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X