Rajinikanth: 10 மில்லியன் வியூசை தாண்டி மாஸ் காட்டும் கூலி டைட்டில் டீசர்.. டிரெண்டிங்கிலும் டாப்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை அவர் நிறைவு செய்துள்ள சூழலில் ஜூன் மாதம் முதல் இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, சத்யராஜ், ஷோபனா, ஸ்ருதிஹாசன் மற்றும் ரன்வீர் சிங் உள்ளிட்ட நடிகர்கள் இணையுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த படத்தின் டைட்டில் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. படத்திற்கு கூலி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீசர் யூட்யூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. அதிகமான வியூஸ்களையும் பெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள கூலி படம் குறித்து தான் கோலிவுட்டில் ரசிகர்கள் அதிகமாக பேசி வருகின்றனர். தற்போது வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படமும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. போலி என்கவுண்டருக்கு எதிரான இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களை சிறப்பான வகையில் என்டர்டெயின் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன் கூட்டணியும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் மஞ்சு வாரியர், ஃபகத் பாசில், ராணா டகுபாட்டி, ரித்திகா சிங் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருவது படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
கூலி டைட்டில் டீசர்: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணைய உள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்திற்கு கூலி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் முன்னதாகவே சில படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள சூழலில், தற்போது இந்த படத்தின் டைட்டிலை தன்னுடைய படத்திற்கு வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த டைட்டில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த டைட்டிலையொட்டி டைட்டில் டீசரில் சில காட்சிகளும் காணப்பட்டன. இந்த டைட்டில் டீசரில் ரஜினிகாந்த் தன்னுடைய மாஸை வெளிப்படுத்தியுள்ளார்.
அதிகமான ஆக்ஷன் காட்சிகள்: மேலும் தான் எப்போதும் சூப்பர்ஸ்டார் தான் என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்தை நெகட்டிவ் ஷேடிலும் பாசிட்டிவ்வாகவும் காட்ட உள்ளதாக முன்னதாக பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். ரஜினி என்றாலே அவரது படங்களில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்றாலும் அதிலும் இன்னும் அதிகமான ஆக்ஷன் காட்சிகளை இந்த படத்தில் பயன்படுத்தவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது.
10 மில்லியன் வியூசை தாண்டிய டைட்டில் டீசர்: டைட்டில் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற சூழலில், ஐந்து நாட்களிலேயே இந்த டைட்டில் டீசர் 10 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும் youtube-லும் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. டைட்டில் டீசருக்கான இந்த வரவேற்பு மூலம் இந்த படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகளவில் வெளிப்பட்டுள்ளது. தங்க கடத்தலை பின்னணியாக வைத்து உருவாக உள்ள கூலி படத்தில் முக்கிய கேரக்டர்களில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஷோபனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











