முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ள சூழலில் படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்ததாக தலைவர் 171 படத்தின் சூட்டிங்கில் ஜூன் மாதத்திலிருந்து இணையவுள்ளார் ரஜினிகாந்த்.

தலைவர் 171 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இன்றைய தினம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள சூழலில் அனிருத் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். படத்தின் டைட்டில் ப்ரமோ இன்றைய தினம் மாஸாக வெளியாகியுள்ளது.

Actor Rajinikanth s Coolie movie title teaser released and impresses fans

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இளம் இயக்குநர்களுடன் இணைந்து தன்னை சிறப்பாக பொருத்தி வருகிறார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் இணைந்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. சர்வதேச அளவில் 600 கோடிகளை தாண்டி வசூலித்தது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளில் தற்போது நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டுள்ளார். இதனிடையே தற்போது ஜெய்பீம் படத்தின்மூலம் கவனம்பெற்ற டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

வேட்டையன் படம்: வேட்டையன் படத்தில் போலீஸ் அதிகாரியாக போலி என்கவுண்டருக்கு எதிராக ரஜினிகாந்த் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த மாதத்துடன் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளது. இதையடுத்து வரும் ஜூன் மாதத்தில் இருந்து தலைவர் 171 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான சூழலில், இன்றைய தினம் படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு கூலி என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் டீசரும் மாஸாக அமைந்துள்ளது.

கூலி படம்: லோகேஷ் கனகராஜின் டைட்டில் டீசர் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்து வருகின்றனர். கமல்ஹாசனுடன் அவர் இணைந்திருந்த விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வேற லெவலில் அமைந்திருந்தது. இந்த டீசரில் ஆரம்பிக்கலாங்கலா என்று கமல் கேட்டது, அனைவரையும் உற்சாகப்படுத்தியது. பல மீம்ஸ்களுக்கு துவக்கமாகவும் இந்த டயலாக் இருந்தது. இதையடுத்து நடிகர் விஜய்யுடன் லோகேஷ் இணைந்திருந்த லியோ படத்தின் டைட்டில் டீசரில் ப்ளடி ஸ்வீட் என்று விஜய் பேசியதும் வைரலானது. இந்தப் படங்களை தொடர்ந்து இன்றைய தினம் வெளியான கூலி படத்தின் டைட்டில் டீசரும் மிகுந்த கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ரஜினியின் முடிச்சிடலாமா டயலாக்: இந்த டீசரில் அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என்று பல டயலாக்குகளை பேசும் ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் வில்லனுக்கு பதிலளிக்கும் வகையில் முடிச்சிடலாமா என்று கேட்பதாக அமைந்துள்ளது. இதன்மூலம் ரஜினிகாந்தின் கேரக்டர் குறித்த ஐடியாவை ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்துள்ளார். இந்த டயலாக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள சூழலில், விக்ரம், லியோ மற்றும் தற்போது வெளியாகியுள்ள கூலி, இந்தப் படங்களில் எந்த டைட்டில் டீசர் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பட்டிமன்றம் வைக்காத குறையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X