ஜெயிலர் 2 படத்திற்கு இவ்வளவு கோடி சம்பளம் கேட்டாரா அனிருத்.. பேச்சுவார்த்தையில் தயாரிப்பு தரப்பு?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது. இந்தப் படத்தையடுத்து அடுத்தடுத்து லால் சலாம் மற்றும் வேட்டையன் படங்களில் நடித்து முடித்துள்ளார் சூப்பர்ஸ்டார். இந்தப் படங்கள் இந்த ஆண்டில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. இவற்றில் வேட்டையன் படம் சிறப்பான வசூலை குவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

rajinikanth jailer 2 movie sun pictures 2

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த இளம் இயக்குநர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலிப்குமாருடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்திருந்த ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் ரிட்டையர்டு ஜெயிலராக அதிரடியாக நடித்திருந்தார் ரஜினிகாந்த். தன்னுடைய மகன் கொலை செய்யப்பட்டதாக நினைத்து வில்லன்களுடன் மோதும் காட்சிகளிலும் பின்னர் உண்மை தெரிய வரும்போது அவர் காட்டும் அதிரடியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே உற்சாகத்துடன் லால் சலாம், வேட்டையன் படங்களில் நடித்து முடித்திருந்தார்.

கூலி படம்: இந்த படங்கள் இந்த ஆண்டில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. இதில் வேட்டையன் படம் சிறப்பான வசூலை குவித்திருந்தது. இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அமீர்கான் இணைந்துள்ளதாகவும் ஜெய்ப்பூர் ஷூட்டிங்கில் அவர் பங்கேற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நெல்சன் திலிப் குமாருடன் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜெயிலர் 2 பட அறிவிப்பு: ஜெயிலர் 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12ம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி கூலி படத்தின் பாடல் கிளிம்ப்ஸ் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அன்றைய தினமே ஜெயலர் 2 படத்தின் அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இதற்கு அனிருத்தான் காரணம் என்று தற்போது கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அனிருத் காரணம்?: ஜெயிலர் படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்தார் அனிருத். அவரது பின்னணி இசையும் பாடல்களும் மிகச்சிறப்பாக படத்திற்கு பலம் சேர்த்திருந்தது. இந்நிலையில் ஜெயிலர் 2 படத்திற்கு இசையமைக்க அனிருத் 17 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டதாகவும் இதில் தயாரிப்பு தரப்பு தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பேச்சுவார்த்தை காரணமாகவே இந்த படத்தின் அறிவிப்பு வெளியாவதில் தாமதம் நீடிப்பதாக கூறப்படுகிறது. வரும் புத்தாண்டு அல்லது பொங்கல் பண்டிகையையொட்டி இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X