ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்துடன் இணையும் லேடீஸ்.. அட இவங்களா.. நெல்சன் ஒரு முடிவோடத்தான் இருக்காரு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் குறைந்த இடைவெளிகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட செய்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டில் லால் சலாம் மற்றும் வேட்டையன் படங்கள் ரஜினி நடிப்பில் வெளியாகின. இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணைந்து நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

கூலி படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

rajinikanth jailer 2 movie tamil cinema 2


நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியானது ஜெயிலர் படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி அதிரிபுதிரி வெற்றி பெற்ற இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதனால் இந்த படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததுடன் நல்ல வசூலும் குவிந்தது. இந்த கலெக்ஷனை படக்குழுவினருடன் சன் பிக்சர்ஸ் கொண்டாடி மகிழ்ந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினருக்கு விலை உயர்ந்த கார் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டன. இந்த படத்தில் ரஜினிகாந்த் ரிட்டையர்டு ஜெயிலராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஜெயிலர் 2 படம்: தன்னுடைய மகனின் இழப்பிற்காக பழிவாங்குவதிலும் உண்மை தெரிந்து அவர் காட்டும் அதிரடியிலும் திரைக்கதை மாஸாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்திருந்தனர். குறிப்பாக படத்தில் சிவராஜ்குமார் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு கிடைத்த மிக சிறப்பான வரவேற்பையடுத்து படத்தின் 2வது பாகம் குறித்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் நெல்சன் திலிப் குமார் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாயகிகள் குறித்த அப்டேட்: விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் இந்த படத்தில் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி லீட் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல முதல் பாகத்தில் காவாலா பாடல் மூலம் மாஸ் காட்டிய நடிகை தமன்னாவும் ஜெயிலர் 2 படத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த பாகத்திலும் அவர் இணைவாரா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே முன்னதாக இந்த படத்தில் முதல் பாகத்தில் மருமகளாக நடித்திருந்த மிர்ணாவும் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


மார்ச் மாதத்தில் சூட்டிங்: அடுத்தடுத்து சூப்பர் ஹிட் நாயகிகள் படத்தில் இணைந்துள்ள நிலையில் முதல் பாகத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து மாஸ் காட்டியிருந்த சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் இணைவார்களா என்ற கேள்வியும் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் அவர் இணையவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X