Jailer: ஷாருக்கான் பட வசூலை முறியடித்த ஜெயிலர் படம்.. சூப்பர்ஸ்டார் எப்பவும் மாஸ்தான்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் நடித்து கடந்த மாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசான படம் ஜெயிலர். இதேபோல கடந்த 7ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் ஜவான் படம் வெளியாகி வசூல் மழை பொழிந்து வருகிறது.

இந்த இரு படங்களும் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்துள்ளன. இதனால் நெல்சன் மற்றும் அட்லீ இருவரையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Actor Rajinikanths Jailer movie beats All Indian movie records and tops

மலேசியாவில் ஷாருக்கான் பட வசூலை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், மோகன் லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, மிர்ணா என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து கடந்த மாதத்தில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியானது ஜெயிலர். இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்து, தன்னுடைய மகன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க களமிறங்கும் கேரக்டரில் சிறப்பான நடிப்பையும் வழக்கமான ஸ்டைலையும் அதிரடியாக வெளிப்படுத்தியிருந்தார் ரஜினிகாந்த்.

இந்தப் படம் சர்வதேச அளவில் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, 700 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில் ஓடிடியிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தை சினிமாவில் பார்த்தவர்களும் ஓடிடியில் மீண்டும் மீண்டும் பார்க்க தங்களது ஆவலை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் படத்தின் வெற்றியை ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருடன் தயாரிப்புத் தரப்பு பகிர்ந்துள்ளது.

ரஜினி மற்றும் நெல்சன் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார் மற்றும் காசோலை வழங்கப்பட்ட நிலையில், அனிருத்திற்கும் விலையுயர்ந்த காரை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பரிசளித்திருந்தார். படத்தின் வெற்றிக்காக முதல்முறையாக ஒரு படத்தின் இசையமைப்பாளரும் கௌரவப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தக் காரை பொக்கிஷமாக பாதுகாக்க உள்ளதாகவும் அனிருத் தன்னுடைய நெகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.

Actor Rajinikanths Jailer movie beats All Indian movie records and tops

இந்நிலையில் கடந்த 7ம் தேதி ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் சர்வதேச அளவில் வெளியான ஜவான் படமும் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடந்த 7 நாட்களில் படத்தின் வசூல் 660 கோடி ரூபாய் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று ரிலீசுக்கு முன்னதாகவே கணிக்கப்பட்ட நிலையில், படம் உலகளவில் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக மாறியுள்ளது.

இந்நிலையில் மலேசியாவில் ஜெயிலர் படத்தை வெளியிட்ட ஐங்கரன் பட நிறுவனம், ஜெயிலர் படம் முன்னதாக அங்கு வெளியான அனைத்து இந்திய படங்களின் வசூலையும் முறியடித்து மிகப்பெரிய வசூல் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. முன்னதாக ஷாருக்கானின் தில்வாலே படம் 5.5 மில்லியன் மலேசிய ரிங்கிட் வசூலித்து முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் முறியடித்துள்ளதாக ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X