Jailer: அடுத்தடுத்து வெளியாகும் போஸ்டர்கள்.. விடாமல் ரசிகர்களை தாக்கும் ஜெயிலர் ஃபீவர்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இன்னும் இரு தினங்களில் ஜெயிலர் படம் ரிலீசாகவுள்ளது.

ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் ஜோடியாக நடித்துள்ள ஜெயிலர் படத்தில் தமன்னா, சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளனர்.

Actor Rajinikanths Jailer movie new poster released

ஜெயிலர் படத்தின் அடுத்த போஸ்டர் ரிலீஸ்: நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் இன்னும் இரு தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ரஜினியின் கடந்த சில படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஜெயிலர் படத்திற்கு சர்வதேச அளவில் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ப்ரமோஷன்களை கடந்த சில வாரங்களுக்கு முன்பே தயாரிப்புத்தரப்பு துவங்கிய நிலையில் முதலில் படத்தின் காவாலா பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலில் தமன்னா மற்றும் ரஜினி ஆட்டம் போட்டிருந்தனர். குறிப்பாக தமன்னாவின் ஆட்டம் இந்தப் பாடலில் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த 3 பாடல்கள் வெளியான நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி படத்தின் இசை வெளியீடும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த இசை வெளியீட்டில் ரஜினியின் பேச்சு மற்றும் குட்டிக்கதை சர்ச்சைக்குள்ளானது. தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தடுத்த ப்ரமோஷன்களால் ஜெயிலர் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

Actor Rajinikanths Jailer movie new poster released

இந்தப் படத்தை பார்ப்பதற்காக சர்வதேச அளவில் ரசிகர்கள் அதிகமாக விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் படத்தின் டிக்கெட் புக்கிங் அதிகமாக நடந்துள்ளது. சென்னையில் முதல் நாளில் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகாவிலும் ஜெயிலர் படத்தின் டிக்கெட் விற்பனை சிறப்பாக அமைந்துள்ளது.

தொடர்ந்து படத்தின் ப்ரமோஷனை சன் பிக்சர்ஸ் விடாமல் தொடர்ந்து வருகிறது. தற்போது படத்தின் அடுத்தடுத்த ப்ரமோக்கள், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக மாறியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில், ரஜினி மாஸாக காணப்படுகிறார். மேலும் இந்த ஒரே போஸ்டரில் சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர். மேலும் ரஜினி படத்தில் தன்னுடைய பேரனுடன் இருக்கும்படியான காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X