Jailer: போலா சங்கரை தட்டித் தூக்கிய ஜெயிலர்.. டிக்கெட் புக்கிங்கில் இவ்ளோ வித்தியாசமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது ஜெயிலர்.
இதேபோல சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் போலா சங்கர் படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் இந்தப் படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படங்களி எந்தப் படம் மிகச்சிறப்பான வரவேற்பை பெறும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
போலா சங்கர் டிக்கெட் விற்பனையை தட்டித் தூக்கிய ஜெயிலர்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன்லால் என நட்சத்திரக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இன்னும் இரு தினங்களில் இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் ட்ரெயிலர், போஸ்டர்கள், பாடல்கள் என அடுத்தடுத்து ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இந்தப் படம் சர்வதேச அளவில் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் ரசிகர்கள் இந்தப் படத்தின் டிக்கெட்டுகளை புக் செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. அதிகப்படியான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த 4 பாடல்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளன.
குறிப்பாக ரஜினி, தமன்னா ஆட்டம் போட்டுள்ள காவாலா பாடலும் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டினரும் இந்தப் பாடலின் ரீல்ஸ்களை செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது. இந்தப் பாடலில் தமன்னாவின் ஆட்டம் வேறு லெவலில் அமைந்த நிலையில், அவருக்கும் செல்லும் இடத்திலெல்லாம் மிகச்சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.

ரஜினியின் ஜெயிலர் படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் தெலுங்கு ரசிகர்களை கவரும்வகையி நடிகர் சுனில் நடித்துள்ளார். இதுபோல ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்களை ஜெயிலர் படத்தில் நெல்சன் திலீப்குமார் இணைத்துள்ளார். இதனிடையே தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியின் போலா சங்கர் படமும் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கான ப்ரமோஷன்களில் படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போலா சங்கர் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கை மிகப்பெரிய அளவில் ஜெயிலர் படம் முறியடித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஜெயிலர் படம் புக் மை ஷோவில் 3 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் சிரஞ்சீவியின் போலா சங்கர் படத்திற்கு 16 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே புக் ஆகியுள்ளது. சிரஞ்சீவியின் சாம்ராஜ்யமான, ஐதராபாத்தில் ஜெயிலர் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் 1 கோடி ரூபாயை கடந்துள்ள நிலையில், சிரஞ்சீவியின் போலா சங்கர் படத்தின் விற்பனை 50 லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











