Jailer: எப்படி இருக்கும் ஜெயிலர் ட்ரெயிலர்.. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் மாஸ் காட்டும் சூப்பர்ஸ்டார்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜெயிலர்.
இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாகவும் ரிலீசாகவுள்ளது.
படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தொடர்ந்து ட்ரெண்டிங்கில் ஜெயிலர் ட்ரெயிலர்: நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே இணைந்துள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், வசந்த ரவி என நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
படம் ரிலீசாக இன்னும் 8 தினங்களே உள்ளன. இதையொட்டி கடந்த சில வாரங்களாக படத்தின் பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனிடையே கடந்த 28ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், ரஜினி, ரம்யா கிருஷ்ணன், நெல்சன் உள்ளிட்ட பலரும் மேடையேறி படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்தப் படத்தில் இருந்து நெல்சனை நீக்க முன்னதாக விநியோகஸ்தர்கள் தன்னிடம் அறிவுறுத்தியதை ரஜினி பகிர்ந்தார்.
மேலும் குட்டிக் கதையொன்றையும் அவர் ரசிகர்களிடையே பகிர்ந்துக் கொண்டார். இந்த கதை பலவிதமான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு சிறப்பான பிரமோஷனையும் இந்த பகிர்வு ஏற்படுத்தியுள்ளது. ரஜினி நடிப்பில் வெளியாகும் படம் என்றாலே அதிகமான வரவேற்பும் எதிர்பார்ப்பும் காணப்படும். இந்நிலையில் ரஜினியின் பேச்சும் தற்போதுவரை விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் இன்றைய தினம் வெளியாகவுள்ளது.
நேற்றைய தினம் படத்தின் புதிய போஸ்டருடன் சன் பிக்சர்ஸ் இந்தத் தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்றிலிருந்து ஜெயிலர் ட்ரெயிலர் மற்றும் ஜெயிலர் ஆகஸ்ட் 10 ரிலீஸ் ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. ட்ரெயிலருக்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்த ட்ரெயிலரில் நெல்சன் எப்படிப்பட்ட காட்சிகளை இணைத்திருப்பார் என்பதே தற்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

பான் இந்தியா படமாக ஜெயிலர் படம் வெளியாகவுள்ள நிலையில், ஒவ்வொரு மொழியிலிருந்தும் சிறப்பான நடிகரை படத்தில் இணைத்துள்ளார் நெல்சன் திலீப்குமார். அவரது இந்தப் பாணி படத்திற்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் மல்ட்டி ஸ்டாரர் படம் இல்லை என்று நெல்சன் முன்னதாக தெளிவுப்படுத்தியுள்ளார். படத்தில் இந்த நடிகர்கள் கேமியோ கேரக்டர்களில்தான் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தன்னுடைய மகன் வசந்த் ரவி கடத்தப்பட, அவரை மீட்கும் நடவடிக்கையில் ரஜினி ஈடுபடுவதாக ஜெயிலர் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் ரஜினியின் ஸ்டைல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் கமெண்ட்ஸ் எழுந்துள்ளது. இசை வெளியீட்டு விழாவில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் இதை ஹைலைட் செய்திருந்தார். ரஜினியின் எனர்ஜி லெவல் இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











