Actor Rajinikanth: ரிலீசுக்கு தயாராகும் லால் சலாம் டீம்.. ரஜினிக்கு ஸ்பெஷல் ஷோ.. நாளை 2வது சிங்கிள்!

சென்னை: ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ள நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் படத்தில் நடித்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பிப்ரவரி மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. பிப்ரவரி 9ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. படத்தில் அனைவரும் தங்களது டப்பிங் உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய டப்பிங் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளார். படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Actor Rajinikanths Lal salaam movie 2nd single releasing tomorrow

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. முன்னதாக அவரது அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ரஜினிக்கு ஜெயிலர் படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்: படம் முன்னதாக பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 9ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. சென்னை, திருவண்ணாமலை, மும்பை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு, நிறைவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம்கூட இல்லாத நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ரஜினிக்கு ஸ்பெஷல் ஷோ: இந்தப் படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ள நிலையில், விரைவில் அவருக்கு தனிப்பட்ட முறையில் படத்தை திரையிட்டு காட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பொங்கல் பண்டிகை கழிந்த பின்பு பிப்ரவரி 20ம் தேதி அவருக்கு ஸ்கீரினிங் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ரஜினி முன்னதாக இயக்கியிருந்த 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்கள் சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லால் சலாம் 2வது சிங்கிள்: முன்னதாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்ததாக பொங்கலையொட்டி நாளைய தினம் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி தன்னுடைய சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். லைகா தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவரது இசை படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளதையும் பார்க்க முடிகிறது. அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்துவரும் விஷ்ணு விஷாலுக்கும் இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X