Actor Rajinikanth: ரஜினி படத்திற்கு இந்த நிலையா.. வசூலில் தொடர்ந்து தடுமாறும் லால் சலாம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் மிகச் சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில் அடுத்த படமாக கடந்த 9ம் தேதி அவரது லால் சலாம் படம் வெளியானது. அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் மிகச் சரியான ப்ரமோஷன்களுடன் வெளியான லால் சலாம் படம்.

கடந்த 9ம் தேதி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில் துவக்கத்தில் படம் ஏராளமான ரசிகர்களை கவரவே செய்தது. மிகச்சிறந்த விமர்சனங்களையும் பெற்றது. ஆயினும் அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் குறைந்து வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த அப்செட்டில் உள்ளனர். கடந்த 9 நாட்களில் படம் சர்வதேச அளவில் சில கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது. ரஜினியின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெறும் நிலையிலும் மிகச்சிறப்பான வசூலை எட்டுவதே வாடிக்கையாக காணப்படுகிறது. இந்நிலையில் ரஜினியை மையமாக கொண்டு அதிகளவில் பிரமோட் செய்யப்பட்ட லால் படத்தின் குறைவான வசூல் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Actor Rajinikanths Lal salaam movie box office report

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் அவர் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் தற்போது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

லால் சலாம் படம்: இதனிடையே கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடித்திருந்த லால் சலாம் படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. முன்னதாக பொங்கல் ரிலீஸாக வெளியாகவிருந்த இந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போனது. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு வெளியாகியிருந்தது. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் சிறப்பான ப்ரொமோஷன்களை மேற்கொண்டு இந்த படம் வெளியானது.

குறைந்த லால் சலாம் வசூல்: அடுத்தடுத்து இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு என படத்தின் ப்ரோமோஷன்கள் மாஸ் காட்டியது. இதனிடையே கடந்த 9ம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் முதல் சில தினங்களில் சிறப்பான வரவேற்பை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றி படமாக அமைந்தது. ஆயினும் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் எண்ணிக்கை குறைந்தது தற்போது படம் வெளியாகி ஒன்பது நாட்களை கடந்துள்ள நிலையில் 27 கோடிகளை மட்டுமே படம் வசூலித்துள்ளதாக சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தெரிவித்துள்ளது. ரஜினியின் சொந்த மாநிலமான கர்நாடகாவிலும் இந்தப் படம் தோல்வியையே சந்தித்துள்ளது.

அப்செட்டில் படக்குழுவினர்: இதனால் படத்தயாரிப்பு நிறுவனமான லைகா மட்டும் இல்லாமல் படக்குழுவினரும் அப்செட்டில் உள்ளனர். முன்னதாக தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அடுத்ததாக வை ராஜா வை என்ற படமும் இவரது இயக்கத்தில் வெளியானது. இதனிடையே தன்னுடைய தந்தையை வைத்து லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து அதன் அரசியலையும் பேசியது. சிறப்பான மேக்கிங்கில் படம் உருவாகியுள்ளதாக முன்னதாக விமர்சனங்கள் எழுந்தநிலையில், படம் ரசிகர்களை அடுத்தடுத்து திரையரங்குகளை நோக்கி வரவழைக்க தவறி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X