Rajini's Lal Salaam: காணாமல் போன லால் சலாம் படக்காட்சிகள்.. அதிர்ச்சியில் படக்குழு?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வரவேற்பைபும் வசூலையும் குவித்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.

தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

Actor Rajinikanths Lal salaam movie mumbai Shooting scenes said to be missing

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது ஜெயிலர் படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 600 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் மிகச்சிறப்பாக கொண்டாடினர். ரஜினி, நெல்சன், அனிருத்திற்கு விலையுயர்ந்த கார்கள் பரிசாக கொடுக்கப்பட்டன.

லால் சலாம் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில் அவரது கேரக்டர் படத்திற்கு மிகப்பெரிய வலிமையை கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Actor Rajinikanths Lal salaam movie mumbai Shooting scenes said to be missing

லால் சலாம் படத்தின் இசை வெளியீடு: இந்தப் படம் 2024 பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 2வது வாரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பை, திருவண்ணாமலை, சென்னை போன்ற இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 3வது படம்.

கேமியோ ரோலில் ரஜினிகாந்த்: படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவரும்வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் 35 நிமிடங்களே வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை காட்சிகள் மிஸ்ஸிங்: இதனிடையே மும்பையில் ரஜினி உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய ஹார்ட்டிஸ்க்கை திறந்து பார்த்தால் அதில் காட்சிகள் மிஸ்ஸிங் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்ததாகவும் இதை மீட்டெடுக்க நவீன தொழில்நுட்ப மென்பொருளை அமெரிக்காவில் இருந்து படக்குழுவினர் வரவழைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிர்ச்சியில் படக்குழுவினர்: ரஜினி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த காட்சிகள் தொடர்ந்து 23 நாட்கள் எடுக்கப்பட்ட நிலையில், இந்தக் காட்சிகள் மிஸ் ஆனதால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகுந்த ஆத்திரத்தில் கத்தி தீர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் காட்சிகள் மீட்டெடுக்கப்பட்டால் படத்திற்கு சிக்கல் இல்லை. இல்லையென்றால் இந்த 23 நாட்கள் சூட்டிங்கை ரஜினியை வைத்து மீண்டும் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் பரிதவிப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X