Actor Rajinikanth: விளையாட்டில் மதத்தை கலந்திருக்கீங்க.. ரஜினி ஆக்ரோஷம்.. லால் சலாம் பிரமோஷன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லால் சலாம் படம் வரும் 9ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள நிலையில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் மும்பை, திருவண்ணாமலை, சென்னை போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய குடும்பம், குழந்தைகள் என்றிருந்த ஐஸ்வர்யா ரஜினி, தனுஷ் உடனான பிரிவிற்கு பிறகு இந்தப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

முன்னதாக 3, வை ராஜா வை படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யாவின் மூன்றாவது முயற்சியாக லால் சலாம் படம் உருவாகியுள்ளது. படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற அவரது கேரக்டர் இந்தப் படத்தில் சிறப்பாக ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் சங்கி இல்லை என்றும் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது ஐஸ்வர்யா ரஜினி பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.

Actor Rajinikanths Lal Salaam movie next to next promotion videos

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படம் வரும் 9ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ளார். 3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து மூன்றாவது முயற்சியாக இந்தப் படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன்பு நடந்த நிலையில், படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

ரஜினியின் பேச்சு: படத்தின் இசை வெளியீட்டின்போது எப்போதுமே சர்ச்சையாக பேசி படத்திற்கான பிரமோஷனை சிறப்பாக மேற்கொள்ளும் ரஜினிகாந்தின் பேச்சு, இந்தப் படத்தின்போதும் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டின்போது காக்கா, கழுகு கதையை சொல்லவில்லை ரஜினிகாந்த். மாறாக, விஜய் குறித்து தான் எதையும் பேசவில்லை என்றும் அவர் தான் பார்த்து வளர்ந்தவர் என்றம் பாசிட்டிவ்வாக பேசினார். இதை தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ரஜினி, தன்னுடைய அப்பாவை சங்கி என்று கூறுவது வருத்தமளிப்பதாகவும் அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்றும் கூறினார்.

அடுத்தடுத்த பிரமோஷன்கள்: இதனிடையே இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், வீடியோக்களை லைகா நிறுவனம் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் விளையாட்டில் மதத்தை கலந்திருக்கிறீர்கள், குழந்தைகள் மனத்தில் விஷத்தை கலந்திருக்கிறீர்கள் என்று ரஜினி பேசுவதாக காட்சிகள் அமைந்துள்ளன. தப்பாக போகிறது என்றும் அவர் கூறுவதாக அமைந்துள்ளது. இந்த வீடியோவில் விஷ்ணு விஷால், விக்ராந்த், கேஎஸ் ரவிக்குமார், நிரோஷா உள்ளிட்டவர்களும் காணப்படுகின்றனர்.

விளையாட்டு அரசியல் பேசும் படம்: மேலும் முன்னதாக ரஜினி, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்துள்ள போஸ்டர் ஒன்றையும் லைகா நிறுவனம் வெளியிட்டிருந்தது. படத்தில் முஸ்லிமாக, மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ள நிலையில், இந்த போஸ்டரில் அவர் அந்த லுக்கில் காணப்படுகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் தீவிர சிந்தனையில் காணப்படுவதாகவும் இந்த போஸ்டரில் உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், படம் விளையாட்டில் காணப்படும் அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X