Lal salaam movie: பொங்கல் ரேஸிலிருந்து பின்வாங்கிய லால் சலாம்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினி டைரக்ஷனில் கேமியோ ரோலில் நடித்துள்ள படம் லால் சலாம்.

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Actor Rajinikanths Lal salaam movie not going to join Pongal race it seems

படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: ஜெயிலர் படம் கொடுத்த சூப்பர் ஹிட்டை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதன் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் சூட்டிங் மும்பை, திருவண்ணாமலை, சென்னை போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

லால் சலாம் படம்: கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்தப் படம் வரும் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று தெரியவருகிறது.

லால் சலாம் படத்திற்கு வந்த சிக்கல்: படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த மும்பை சூட்டிங்கின் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தற்போது செயல்படாததால் அதன் காட்சிகளை மீட்க படக்குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த ஹார்ட் டிஸ்கை செயல்படுத்தும் வகையில் அமெரிக்காவில் இருந்து நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாடல்களை இணைக்க திட்டம்: மேலும் படத்தில் இரு பாடல்களை இணைக்க படக்குழுவினர் தற்போது திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை அணுகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் இதற்காக தன்னுடைய டேட்சை ஒதுக்கி பாடல்களை கொடுத்து, அதை சூட் செய்து, இதனாலும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், படத்தின் இசை வெளியீடும் டிசம்பரில் ரஜினியின் பிறந்தநாளையொட்டி நடக்கவிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

ஐஸ்வர்யா ரஜினி நெகிழ்ச்சி: முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினியின் 3வது படமாக லால் சலாம் உருவாகியுள்ளது. தன்னுடைய தந்தையை இயக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. தன்னுடைய தந்தையை தான் இயக்குவேன் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்றும் தன்னுடைய கனவு நனவான தருணம் என்றும் அவர் முன்னதாக இன்ஸ்டாகிராமில் கூறியிருந்தார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்திருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X