Lal salaam movie: தொழில்நுட்ப கோளாறு.. தாமதமான லால் சலாம் ட்ரெயிலர்.. ரசிகர்கள் அதிருப்தி!

சென்னை: நடிகர் ரஜினி தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ள படம் லால் சலாம். இன்னும் 4 நாட்களில் வரும் பிப்ரவரி 9ம் தேதி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. 3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கத்தில் 3வது படமாக உருவாகியுள்ள லால் சலாம் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதேபோல படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவும் அடுத்தடுத்த போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

முன்னதாக படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் இந்த நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த், நடிகர் விஜய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். இந்நிலையில் இன்றைய தினம் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டனர். விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஐஸ்வர்யா ரஜினி உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாரஸ்யங்களை பகிர்ந்தனர்.

Actor Rajinikanths Lal salaam movie trailer not released due to technical reasons

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். இன்னும் 4 நாட்களில் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவரது கேரக்டரின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சிறப்பான பிரமோஷன்: முன்னதாக படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை லைகா நிறுவனம் வெளியிட்டு படத்திற்கு சிறப்பான பிரமோஷனை கொடுத்துள்ளது. படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலும் படம் குறித்த பல்வேறு பகிர்வுகளை தன்னுடைய பேட்டிகள் மூலம் கொடுத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு நடந்த நிலையில், ரஜினி உள்ளிட்டவர்களின் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக ஜெயிலர் படத்தில் தான் பேசிய காக்கா -கழுகு கதை எப்படி தவறுதலாக புரிந்துக் கொள்ளப்பட்டது என்பதை ரஜினிகாந்த் லால் சலாம் படத்தின் ஆடியோ ரிலீசில் தெளிவுப்படுத்தினார்.

ட்ரெயிலர் வெளியாவதில் சிக்கல்: இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் மாலை 5 மணிக்கு ரிலீசாகவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படத்தின் ட்ரெயிலர் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால் இரவு 9 மணிவரையிலும் ட்ரெயிலர் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ட்ரெயிலர் தான் வெளியாகவில்லை. டீசரை பார்த்தாவது சமாதானம் அடையலாம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்தனர். லைகா நிறுவனத்தை கலாய்த்தும் பல ட்வீட்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகின.

பத்திரிகையாளர் சந்திப்பு: இன்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னையில் நடந்தது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, ஐஸ்வர்யா ரஜினி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு படம் குறித்த பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டனர். இந்தப் படம் உருவான விதம் குறித்து ஐஸ்வர்யா ரஜினி பகிர்ந்திருந்தார். படத்தின் கதையை வெளிப்படுத்திய அவர், படம் அரசியல் பேசும் என்றும் குறிப்பிட்டுள்ளார். படத்தில் தேர் திருவிழ மற்றும் கிரிக்கெட் போட்டி எப்படி பிரச்சினைகளை சந்திக்கிறது என்பது குறித்து படம் பேசும் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னை நம்பி இந்த பிராஜெக்டை கொடுத்த தயாரிப்பாளர்கள் குறித்தும் அவர் நெகிழ்ச்சி தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X