Lal salaam: மிரட்டலாக வெளியான லால் சலாம் ட்ரெயிலர்.. தாமதமாக வெளியானதால் ரசிகர்கள் கடுப்பு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் நடித்துள்ள படம் லால் சலாம். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை தொடர்ந்து லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்கள் மிகப்பெரிய அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. படத்தின் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் ட்ரெயிலரை படக்குழுவினர் வெளியிட்டுளளனர். அதிரடி சரவெடியாக ட்ரெயிலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

லால் சலாம் படம்: நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவர் கேமியோ ரோலில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ள லால் சலாம் படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும் நிரோஷா ரஜினிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். நீண்ட காலங்களுக்கு பிறகு செந்தில் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளது ரசிகர்களை அதிகளவில் ஈர்த்துள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பு: இன்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, செந்தில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் பங்கேற்று படம் குறித்த சுவாரஸ்யங்களை பகிர்ந்தனர். மும்பையில் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நடந்த நிலையில், முதல்நாள் சூட்டிங்கின்போது ரஜினி நடந்து வருவதாக காட்சி எடுக்கப்பட்டதாகவும் அவரது ஸ்டைலை பார்த்து தானும் விக்ராந்த் உள்ளிட்டவர்களும் மலைத்து போனதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தன்னுடைய 15 வருட கேரியரில் ரஜினியுடன் தான் இணைந்தது மிகப்பெரிய அதிர்ஷ்டமாக தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

லால் சலாம் ட்ரெயிலர்: படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வரும் நிலையில் முன்னதாக படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினரின் உழைப்பு இந்த ட்ரெயிலர் மூலம் வெளிப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா ரஜினி கூறியது போல ஒரு ஊரின் தேர்த்திருவிழா மற்றும் கிரிக்கெட் போட்டி, இதன்மூலம் ஏற்படும் பிரச்சினையை படம் பேசுவதை இந்த ட்ரெயிலர் மூலம் அறிய முடிகிறது. படத்தின் ட்ரெயிலர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு 9.30 மணிக்கு வெளியானது ரசிகர்களை கடுப்பேற்றியது குறிப்பிடத்தக்கது
அழுத்தமான கேரக்டரில் ரஜினி: கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் ரஜினியின் கேரக்டர் மிகவும் அழுத்தமாக அமைந்துள்ளது. தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்டவர்களின் உணர்ச்சி பூர்வமான நடிப்பையும் இந்த ட்ரெயிலர் மூலம் பார்க்க முடிகிறது. படத்திற்கு விஷ்ணு விஷாலின் நடிப்பும் முக்கியமான பங்களிப்பை செய்துள்ளதையும் ஏஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











