Actor Rajinikanth: ரஜினி கெட்டப்பில் ஃபேக் வீடியோ.. இதுகூட நல்லாதான் இருக்கு.. கலாய்த்த ரசிகர்கள்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்து நடைபெற்று வரும் சூழலில் இந்த மாதத்துடன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் வரும் அக்டோபர் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் வரும் ஜூன் மாதத்தில் இருந்து லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணையும் தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.

இது குறித்து முன்னதாக அறிவித்துள்ள லோகேஷ் கனகராஜ் இம்மாதம் 22ம் தேதி படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பிரமோவிற்கான சூட்டிங் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நேற்றைய தினம் தொடங்கிய சூழலில் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் டிப்டாப்பான லுக்கில் ரஜினிகாந்த் முன்னதாக நடந்து வர அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த விஜய் உள்ளிட்ட நடிகர்கள் மாஸாக நடந்து வருவதாக காணப்படுகிறது.

Actor Rajinikanth s latest video trending in social media

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட சூழலில் தற்போது ஜூன் மாதத்திற்கு சூட்டிங் தள்ளிப் போய் உள்ளது. ஸ்கிரிப்ட் வேலைகள் அதிக மாதங்களை எடுத்துக் கொண்டதாகவும் அதனால் ஜூன் மாதத்தில் இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும் முன்னதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Actor Rajinikanth s latest video trending in social media

இதனிடையே இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ வரும் 22ம் தேதி வெளியாக உள்ளதாக லோகேஷ் கனகராஜ் முன்னதாக அறிவித்துள்ளார். இந்த டைட்டில் புரோமோவிற்கான ஷூட்டிங் சென்னையில் நேற்றைய தினம் துவங்கிய சூழலில் இரு தினங்களில் முடிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள சூழலில் சன் டிவி அலுவலகத்திலேயே இந்த டைட்டில் ப்ரோமோவிற்கான ஷூட்டிங் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சாண்டி மாஸ்டர் ரஜினியுடன் இணைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பாலிவுட்டில் இருந்து ரன்வீர் சிங் மற்றும் கோலிவுட்லிருந்து ராகவா லாரன்ஸ் மற்றும் மலையாளத்தில் பிரித்விராஜ் அல்லது மம்முட்டி ஆகியோர் இந்த படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைவர் 171 படத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் ரன்வீர் சிங், லாரன்ஸ், சாண்டி இவர்களுடன் ரஜினிக்கு ஜோடியாக ஷோபனா இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஜோடி 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளது. முன்னதாக தளபதி படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஷோபனா இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இவர்கள் ஜோடி சேரவில்லை என்றபோதிலும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்தது. கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X