ரஜினிகாந்த்: அடிப்பொலி.. மீண்டும் ஹிட்டடித்த சூப்பர்ஸ்டார் -அனிருத் காம்பினேஷன்.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளை ஆக்கிரமிக்க உள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு சரியாக ஒரு மாத காலம் உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக சூப்பர்ஸ்டார் -அனிருத் காம்பினேஷனில் வெளியான ஜெயிலர் படத்தின் அனைத்து பாடல்களும் அதிரடி சரவெடியாக காணப்பட்டது. அதிரடி பாடல், மெலடி பாடல் என அனைத்தையும் கொடுத்து ரசிகர்களை கொண்டாட செய்திருந்தார் அனிருத். படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி வொர்க் அவுட் ஆகியுள்ளது.

rajinikanth vettaiyan movie first single

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து நிற்கக்கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த சூட்டிங்கில் இணைந்து வருகிறார். கடந்த ஆண்டில் ஜெயிலர் படம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் லால் சலாம் படம் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படம் அக்டோபர் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர்.

வேட்டையன் பர்ஸ்ட் சிங்கிள்: வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. இந்தப் பாடலில் ரஜினிகாந்துடன் மஞ்சு வாரியர் மற்றும் அனிருத் இணைந்து ஆட்டம் போட்டுள்ளனர். இந்தப் பாடலை கொண்டாடிவரும் ரசிகர்கள் தொடர்ந்து பாடலை பார்த்து வருகின்றனர். சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான வியூஸ்களை மனசிலாயோ பாடல் பெற்றுள்ளது. இந்தப் பாடலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு மலேசியா வாசுதேவன் ரஜினிக்காக வாய்ஸ் கொடுத்துள்ளார். ஏஐ தொழில்நுட்பம் மூலம் இதை படக்குழுவினர் சாத்தியப்படுத்தியுள்ளனர். மேலும் பாடலில் யுகேந்திரன், அனிருத் உள்ளிட்டவர்களும் பாடியுள்ளனர்.

ரசிகர்கள் உற்சாகம்: இதனிடையே ரசிகர்கள் சிறப்பான கமெண்ட்கள் மூலம் படக்குழுவினருக்கும் ரஜினிகாந்திற்கும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 74 வயதிலும் ரஜினிகாந்தை ரசிக்கவும் விமர்சிக்கவும் ஒரு மாபெரும் கூட்டம் உள்ளதாக ஒரு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை கடந்துள்ளதற்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனிடையே, சூப்பர்ஸ்டார் இடத்தை யாராலும் பிடிக் முடியாது என்றும் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அனிருத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அடிப்பொலி அனிருத் என ரசிகர்கள் ஒருவர் பாராட்டியுள்ளார்.

ரஜினி -மஞ்சு வாரியர் ஜோடி: தலைவர் இப்பவும் என்ன எனர்ஜி என்றும் இவருக்கு டீ -ஏஜிங் எல்லாம் தேவையே இல்லை என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்துள்ளனர். இதனிடையே, ரஜினிக்கு மஞ்சு வாரியர் சூப்பர் ஜோடி என்றும் பாராட்டியுள்ளனர். இந்த வயதிலும் ரஜினிக்கு இப்படி ஒரு வேகம், துள்ளல் என்றும் இது கடவுள் தந்த பரிசு என்றும் மற்றொரு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். வயசானாலும் ரஜினியும் அழகும் ஸ்டைலும் அவரை விட்டு போகவில்லை என்ற படையப்பா பட டயலாக்கையும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். சூப்பர் சாங், மனசிலாயோ சாரே என்றும் ஒரு ரசிகர்கள் பதிவிட்டுள்ளார். யூடியூபில் வெளியாகியுள்ள இந்தப் பாடலில் கமெண்ட்களால் ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X