Rajinikanth: இமயமலையில் அடுத்தடுத்த போட்டோஸ்.. சாலையில் நின்றபடி போஸ் கொடுத்த ரஜினிகாந்த்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் இளம் இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ஜெயிலர் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் ரஜினி கேமியோ கேரக்டரில் நடித்திருந்த லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், இன்னும் சில தினங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணையவுள்ளார். இந்த இரு படங்களின் இடையில் கிடைத்த ஓய்வில் அவர் தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை தற்போது மேற்கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் கடந்த மாதத்தில் நிறைவடைந்த சூழலில் ரஜினிகாந்திற்கு பூங்கொத்து கொடுத்து படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்ததை பார்க்க முடிந்தது. இந்த படம் அக்டோபர் மாதத்தில் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளது. தற்போது வேட்டையன் மற்றும் கூலி படங்களுக்கு இடையில் கிடைத்த ஓய்வை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார் ரஜினிகாந்த்.
ரஜினிக்கு கோல்டன் விசா: சில தினங்களுக்கு முன்னதாக அபுதாபி சென்றிருந்த ரஜினிகாந்த், அங்கு யூஏஇ அரசு சார்பில் தனக்கு கொடுக்கப்பட்ட கோல்டன் விசாவை பெற்றுக் கொண்டார். முன்னதாக இந்த விசாவை கமல்ஹாசன், அமிதாபச்சன், ஷாருக்கான் உள்ளிட்டவர்கள் பெற்ற நிலையில் தற்போது ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அபுதாபியில் முக்கியமான நபர்களை சந்தித்த ரஜினிகாந்த் பாப்ஸ் இந்து மந்தீரிலும் சாமி தரிசனம் செய்ததை பார்க்க முடிந்தது. அபுதாபியிலிருந்து சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தொடர்ந்து தன்னுடைய இமயமலை பயணத்தை துவங்கினார்.
ரஜினியின் ஆன்மீக பயணம்: எப்போதுமே தன்னுடைய படங்களுக்கு இடையில் கிடைக்கும் ஓய்வை இமயமலை பயணத்தின் மூலம் ரஜினிகாந்த் நிரப்புவதை வழக்கமாக கொண்டவர். இதன் மூலம் தன்னுடைய மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதாக ரஜினிகாந்த் எப்போதுமே கூறுவது உண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய உடல் நலக் குறைவு காரணமாக இமயமலை பயணங்களை தவிர்த்து வந்த ரஜினிகாந்த். தற்போது மீண்டும் இமயமலை பயணங்களை துவங்கியுள்ளார். ஆன்மீக நாட்டம் அதிகமாக கொண்ட ரஜினிகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரகாண்டிற்கு தன்னுடைய பயணத்தை துவங்கியுள்ளார்.
இமயமலையில் ரஜினி புகைப்படம்: அங்கு அடுத்தடுத்த இடங்களில் அவர் சுற்றி வருவதை பார்க்க முடிகிறது. நேற்றைய தினமும் ரஜினிகாந்தின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இன்றைய தினமும் அவர் இமயமலையில் சுற்றி திரிவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் பனிபடர்ந்த மலைகளின் பின்புலத்தில் நடிகர் ரஜினிகாந்த் சாலையில் நின்றபடி வெளியிட்டுள்ள புகைப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. தன்னுடைய ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பவுள்ள ரஜினிகாந்த், கூலி படத்தின் ஷூட்டிங்கில் இன்னும் சில தினங்களில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கூலி படம்: இதற்கான முன் தயாரிப்பு பணிகளை லோகேஷ் கனகராஜ் நிறைவு செய்துள்ள நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் அறிவிக்கப்பட்டு துவங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வித்தியாசமான ரோலில் நடிக்கவுள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ள சூழலில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் புரோமோ ஆகியவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மாஸ் காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











