Rajinikanth: விஜயகாந்த் நினைவுதினம்.. ரஜினி சொன்ன அந்த வார்த்தை.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான மறைந்த விஜயகாந்தின் முதலாண்டு நினைவு தினம் இன்றைய தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டில் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவரது இறப்பிற்கு பலரும் கண்ணீர் விட்டு கதறியதை பார்க்க முடிந்தது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு பிறகு விஜயகாந்த் மறைவிற்கு இத்தகைய ரசிகர்களின் கண்ணீர் அதிகமாக இருந்தது. இந்நிலையில் அவர் இறந்து ஒரு ஆண்டு ஆகியுள்ளது.

rajinikanth vijayakanth death anniversary

விஜயகாந்த் நினைவுதினம்: நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அவருடைய மறைவை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் அவரது உடலை இறுதியாக பார்க்க கூடியதை பார்க்க முடிந்தது. புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு புரட்சிக்கலைஞன் விஜயகாந்தின் மறைவு ஏராளமான ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்தது. இதனிடையே இன்றைய தினம் அவரது முதலாமாண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரஜினிகாந்த் ரியாக்ஷன்: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி தேமுதிக சார்பில் பேரணி நடத்தப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் தடையை மீறி பேரணி நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடுப்பான ரசிகர்கள்: சென்னை விமானநிலையம் வந்த ரஜினிகாந்திடம் விஜயகாந்தின் நினைவு நாள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, கேள்வியை முழுமையாககூட கேட்காமல் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இதையடுத்து மீண்டும் அவரிடம் இதை விளக்கிய நிலையில் அவர் ஒருவழியாக சமாளித்ததை பார்க்க முடிந்தது. சர்வதேச அளவில் மிகப்பெரிய நடிகராக, சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், மெச்சூரிட்டி இல்லாமல் இப்படி நடந்துக் கொண்டது ரசிகர்களை கடுப்படித்துள்ளது. பலரும் இதுகுறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

கூலி குறித்து உற்சாகம்: ஆனாலும் அவருடைய கூலி படம் குறித்த கேள்விகளுக்கு சிறப்பாகவே பதிலளித்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் கூலி படத்தின் 70 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் சில தினங்களில் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் 171வது படமாக கூலி படம் உருவாகிவரும் நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்துவிட்டு வரும் மார்ச் மாதம் முதல் ஜெயிலர் 2 படத்தின் சூட்டிங்கில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X