Rajinikanth: சென்னையில் நடக்கும் தலைவர் 170 பட சூட்டிங்.. கலக்கல் செட்டில் விறுவிறு படப்பிடிப்பு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் சூப்பர் ஹிட்டை தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்துள்ளார். படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது.

Actor Rajinikanths Thalaivar 170 movie shooting happening in Chennai Prasad labs

அடுத்ததாக தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் தற்போது கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஜெயிலர் படம் மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்த நிலையில் மிகுந்த உற்சாகத்துடன் அடுத்தடுத்த படங்களில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது.

தலைவர் 170 படம்: இந்நிலையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. பிரசாத் லேபில் நடைபெற்றுவரும் இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதம் இறுதிவரை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமிஷனர் ஆபீஸ் அலுவலகம் போன்ற செட் அமைக்கப்பட்டு படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

ரஜினியுடன் இணைந்த அமிதாப்பச்சன்: இந்த சூட்டிங்கில் ரஜினிகாந்துடன் பகத் பாசில், ரித்திகா சிங் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்துடன் இணைந்துள்ள நிலையில் அவர் போலி என்கவுண்டருக்கு எதிராக ரஜினியுடன் கைகோர்ப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ரஜினி -அமிதாப் காம்பினேஷன் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த ரஜினி கெட்டப்: இந்தப் படத்தில் ரஜினியுடன் பகத் பாசில், ரித்திகா சிங், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் கமிட்டாகியுள்ள நிலையில், படத்தில் ரஜினிகாந்தின் கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தின் பூஜையின்போது அவரது கெட்டப் சிறப்பாக வெளிப்பட்டது. திருவனந்தபுரத்தில் முதல் கட்ட சூட்டிங் நடந்த நிலையில் தொடர்ந்து மும்பையில் சூட்டிங் நடத்தப்பட்டது. தற்போது சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

ரஜினி பிறந்தநாளில் டைட்டில் அறிவிப்பு?: ரஜினியின் லால் சலாம் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் டைட்டில் அடுத்த மாதம் ரஜினியின் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் நடிக்க ரஜினி கமிட்டாகிய்ள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X