Rajinikanth: இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா தலைவர் 171.. மாஸ் காட்ட தயாராகும் ரஜினிகாந்த்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணைய உள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கவிருந்த நிலையில் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக நான்கைந்து மாதங்களை எடுத்துக் கொண்டார் லோகேஷ். இதையடுத்து படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார். இதனிடையே இந்த மாதம் 22ம் தேதி இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியாக உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த யூகங்களையும் இந்த போஸ்டர் உருவாக்கியுள்ளது. இந்தப் படம் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக உருவாகவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ படமும் ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷனில் வெளியான நிலையில், தற்போது தலைவர் 171 படமும் ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Rajinikanth s Thalaivar 171 movie seems to be a remake of hollywood movie

நடிகர் ரஜினிகாந்த்: ஜெயிலர் படத்தின் அட்டகாசமான வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தின் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடையுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தின் ஷூட்டிங்கிலும் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ள நிலையில் இந்த மாதம் 22ம் தேதி படத்தின் டைட்டில் பிரமோ வெளியாக உள்ளதாக லோகேஷ் கனகராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்துள்ளார்.

வேட்டையன் படம்: இதற்கான ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் மற்றும் லியோ படங்களில் டைட்டில் பிரமோ படத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் வெளியானது. ஆனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் தலைவர் 171 படத்தின் டைட்டில் பிரமோவும் அதே போன்ற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் முன்னதாக வெளியான நிலையில் அதில் ரஜினிகாந்த் கைகளில் வாட்ச்களால் போடப்பட்ட விலங்குடன் காணப்பட்டார்.

தலைவர் 171 படம்: இதையடுதது தலைவர் 171 படம் டைம் டிராவல் படமாக உருவாக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே இந்த படம் ஹாலிவுட்டில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான The Purge என்ற படத்தின் ரீமேக்காக உருவாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐந்து பாகங்களாக இந்தப் படம் வெளியான நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான பாகத்திலிருந்து தற்போது தலைவர் 171 படத்தின் கதைக்களம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தலைவர் 171 படத்தின் டைட்டில் ப்ரோமோ வரும் 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு கழுகு என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஹாலிவுட் படத்தின் காப்பியா?: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான லியோ படமும் ஹாலிவுட்டின் History of violence படத்தின் தாக்கத்தில் உருவானதாக கூறப்பட்ட நிலையில், அதை டைட்டிலில் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தலைவர் 171 படத்திற்கும் அதேபோல டைட்டில் கிரெடிட் கொடுக்கப்பட்டு படமாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், படத்தை ரிலாக்சாக எடுக்கவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் தெரிவித்திருந்தார். லியோ படத்தை போல அழுத்தத்துடன் இந்தப் படத்தை இயக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X