Actor Rajinikanth: மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகும் தலைவர் 171.. அட இவங்கல்லாம் ஜாய்ன் ஆகுறாங்களா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ளனர். 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் -அமிதாப்பச்சன் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு மாஸாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. பல யூகங்களையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளைய தினம் படத்தின் டைட்டில் பிரமோ வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் வில்லன் மற்றும் ஹீரோ என மிக்சிங்காக ரஜினி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் புரிந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்து வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப்படத்தின் சூட்டிங் இம்மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து வரும் ஜூன் மாதத்திலிருந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணைகிறார் ரஜினிகாந்த்.
தலைவர் 171 படம்: இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை கடந்த ஆண்டு இறுதியிலேயே துவங்கிவிட்டார் லோகேஷ் கனகராஜ். படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ஸ்கிரிப்ட் வேலைகளை முடிக்க 5 -6 மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும் அதனால் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியொன்றில் கூறினார். முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். கைகளில் வாட்ச்களால் போடப்பட்ட விலங்குடன் இந்தப் போஸ்டரில் ரஜினி காணப்பட்டது, படம் குறித்த பல்வேறு யூகங்களை எழுப்பியது.
ரஜினியுடன் சத்யராஜ்?: இதையெல்லாம் மறுத்த லோகேஷ் கனகராஜ், படம் எதிர்பார்ப்பை மீறி இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாளைய தினம் படத்தின் டைட்டில் பிரமோ வெளியாகவுள்ளது. படத்தின் டைட்டில் கழுகு, கோல்ட், ராணா என பல யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிஸ்டர் பாரத் உள்ளிட்ட படங்களில் ரஜினி -சத்யராஜ் காம்பினேஷன் இருந்தது. ஆனால் இடையில் பல காலங்கள் இருவரும் இணைந்து நடிக்காமல் இருந்தநிலையில், மீண்டும் இவர்களது கூட்டணி அமையுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லீட் கேரக்டரில் ஸ்ருதிஹாசன்: இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசனும் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவுள்ளது ஏறக்குறைய உறுதிப்பட்டுள்ளது. படத்தில் ரஜினிக்கு அவர் மகளாக நடிக்கிறாரா என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர் வெயிட்டான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் ஆனால் மகளாக இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் நாகர்ஜூனாவும் தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளைய தினம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ள சூழலில், படத்தின் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பும் வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











