Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பேட்டியொன்றில் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு விஜய்யின் லியோ படத்தை இயக்கியதால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தது. இதனால் சில சமரசங்களை செய்ததாக தெரிந்தது. இதையடுத்து படத்தின் இரண்டாவது பாதி ரசிகர்களை கவரத் தவறியது. இந்நிலையில் அதுபோன்று எந்த நெருக்கடியும் இல்லாமல் தலைவர் 171 படத்தை ஒன்றரை ஆண்டுகள் இயக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தை இதுவரை இல்லாதவகையில் அதிகமான ஆக்ஷன் காட்சிகளுடன் திரையில் காட்டவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்தப் படத்தின் டைட்டில் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளதாக அவர் கூறியிருந்த நிலையில் தற்போது அதன் தேதியையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த வெற்றிப்பட இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. படம் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், இந்த வெற்றியை ரஜினி, நெல்சன் அனிருத் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடியது. ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத்திற்கு விலையுயர்ந்த கார் பரிசாக கொடுக்கப்பட்டது. ரஜினி மற்றும் நெல்சனுக்கு படத்தின் லாபத்தில் பங்களிக்கப்பட்டது.
வேட்டையன் சூட்டிங்கில் ரஜினி: இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான லால் சலாம் படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் அவர் நடித்திருந்த நிலையில், படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அவரது கேரக்டர் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது தன்னுடைய 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தலைவர் 171 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து வரும் ஜூன் மாதத்தில் சூட்டிங் துவங்கவுள்ள தலைவர் 171 படத்தின் சூட்டிங்கில் ரஜினிகாந்த் இணையவுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படம் குறித்து முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக லோகேஷ் தனது சமீபத்திய பேட்டியில் அறிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக தான் 5 -6 மாதங்களை எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைவர் 171 டைட்டில் அப்டேட்: இந்தப் படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது டைட்டில் ரிலீசாகவுள்ள தேதி குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏப்ரல் 22ம் தேதி படத்தின் டைட்டில் ரிலீசாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் வாட்ச்களால் விலங்கிடப்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் காணப்படுகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். அன்பறிவ் படத்தின் ஸ்டண்டை மேற்கொள்ளவுள்ளனர்.


Click it and Unblock the Notifications