Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் இன்னும் சில தினங்களில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து வரும் ஜூன் மாதத்தில் தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் சூப்பர்ஸ்டார்.
அடுத்தடுத்து மாஸ் கூட்டணியில் இணைந்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இணைந்து ஜெயிலர் படத்தை கொடுத்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 600 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. இதையடுத்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் இணைந்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே கொடுத்தது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் 70 வயதை கடந்தநிலையிலும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். இளம் இயக்குநர்களுடன் அதிரடி சரவெடியாக கூட்டணி அமைத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து ஜெயிலர் என்ற வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார். இந்தப் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்தது. இந்த வெற்றியை தயாரிப்பு தரப்பு ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடியது. ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத்திற்கு விலைமதிப்பு மிக்க காரை பரிசளித்தது.
வேட்டையன் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான லால் சலாம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது. இந்த மாதத்துடன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீபாவளி ரிலீசாக படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் 171 டைட்டில் பிரமோ: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஜூன் மாதத்திலிருந்து இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்ததாக டைட்டில் பிரமோ வரும் 22ம் தேதி ரிலீசாகவுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை காலதாமதமானதால் இந்தப் படத்தின் ரிலீசும் தற்போது தள்ளிப்போயுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பது குறித்து சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பட்டிமன்றமே வைத்து வருகின்றனர்.
இரு தினங்களில் டைட்டில் பிரமோ: கழுகு, ராணா, கோல்ட் என பல தலைப்புகளும் இந்தப் படத்தின் டைட்டிலாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கைகளில் வாட்ச்களால் போடப்பட்ட விலங்குடன் ரஜினிகாந்த் காட்சியளிக்கிறார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ள புதிய பிரமோவில் மீண்டும் வாட்ச் ஓடுவதாகவும் அதில் இன்னும் இரு தினங்களில் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிகாரத்தை இந்தப் படத்தின் குறியீடாக லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் டைம் டிராவல் படமாக இருக்குமா என்றும் ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











