Thalaivar170: நெல்சன் பாணியை கடைபிடிக்கும் டிஜே ஞானவேல்.. அதிரடியாக துவங்கிய தலைவர்170 சூட்டிங்!
திருவனந்தபுரம்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட மாஸ் ஹிட்டிற்கு பிறகு அவர் தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்தப் படத்தின் சூட்டிங் நேற்றைய தினம் பூஜையுடன் திருவனந்தபுரத்தில் துவங்கியுள்ளது. படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.
நெல்சன் பாணியை கடைப்பிடிக்கும் இயக்குநர் டிஜே ஞானவேல்: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஜெயிலர் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியான இந்தப் படத்தில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார் என ஒவ்வொரு மொழியிலும் முன்னணி ஹீரோக்களை களமிறக்கியிருந்தார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், ஹுகும், காவாலா போன்ற பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இந்தப் படத்தின் வசூல் 700 கோடி ரூபாய்களை தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து படத்தின் சக்சஸை ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்துடன் பகிர்ந்துக் கொண்டது சன் பிக்சர்ஸ் மேலும் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. அவர் படத்தில் கேமியோ ரோலில்தான் நடித்துள்ளார் என்றபோதிலும் ஏறக்குறைய ஒருமாத காலம் இந்தப் படத்தின் சூட்டிங், மும்பை, சென்னை, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் இந்தப் படத்தின் டப்பிங்கையும் ரஜினி முடித்துக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அடுத்ததாக தலைவர் 170 என்ற படத்தில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் இணைந்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் நேற்றைய தினம் பூஜையுடன் திருவனந்தபுரத்தில் துவங்கியுள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா, ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங்கும் துவங்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இசையமைப்பாளராக மீண்டும் அனிருத் கமிட்டாகியுள்ளார்.
முன்னதாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒவ்வொரு மொழியிலும் முன்னணி ஹீரோக்களை கேமியோ கேரக்டர்களாக ரஜினிக்கு உதவும் வகையில் இணைத்திருந்தார் நெல்சன். அதேபோல தற்போது தலைவர்170 படத்திலும் ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்களை படத்தில் டிஜே ஞானவேல் இணைத்துள்ளார். இந்தியில் அமிதாப் பச்சன், தெலுங்கில் ராணா மற்றும் மலையாளத்தில் பகத் பாசில் மற்றும் மஞ்சு வாரியர் போன்ற முன்னணி நடிகர்கள் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர்.

ஜெயிலர் படத்தில் நெல்சனின் இந்த யுக்தி சிறப்பான பலனை கொடுத்தது. படத்தில் அவர்கள் அனைவருக்கும் சமமான கேரக்டர்களை கொடுத்திருந்தார் நெல்சன். குறிப்பாக படத்தில் சிவராஜ்குமாரின் கேரக்டர் மிகப்பெரிய பலத்தை கொடுத்தது. அந்த வகையில், தற்போது தலைவர்170 படத்தில் இணைந்துள்ள நடிகர்களுக்கும் சமமான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் என்று நம்பலாம். ரஜினி மற்றும் அமிதாப்பச்சன் 32 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











