Thalaivar170: திருவனந்தபுரத்திற்கு முன்பு சென்னை.. பூஜையுடன் துவங்கும் தலைவர்170 சூட்டிங்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படங்களை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார்.

Actor Rajinikanths Thalaivar170 movie shooting to start in Chennai on 5th with Pooja

சென்னையில் 5ம் தேதி பூஜையுடன் துவங்கும் தலைவர்170 பட சூட்டிங்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது. முன்னதாக அண்ணாத்த படத்தை தயாரித்திருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே ஜெயிலர் படத்தையும் தயாரித்திருந்த நிலையில், இந்தப் படம் மிகச்சிறப்பாக கைகொடுத்துள்ளது. இதனால் தயாரிப்பு தரப்பு மிகுந்த உற்சாகமடைந்துள்ளதுடன் இந்த வெற்றியை ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் படக்குழுவினருடன் பகிர்ந்துக் கொண்டுள்ளது.

அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் அவர் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் ஏறக்குறைய ஒரு மாதகாலம் படத்தில் அவருக்கான சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்திற்கான தன்னுடைய டப்பிங் பணிகளையும் ரஜினிகாந்த் முடித்துக் கொடுத்துள்ளார். இதன் வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இந்தப் படங்களை தொடர்ந்து ஜெயிலர் படம் கொடுத்த வெற்றிக்கான குதூகலத்துடன் தன்னுடைய தலைவர் 170 படத்தில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் இணையவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் 5ம் தேதி பூஜையுடன் துவங்கவுள்ளது. இதையொட்டி படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை கடந்த இரு தினங்களாக படக்குழு அறிவித்து வருகிறது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகியுள்ளார்.

Actor Rajinikanths Thalaivar170 movie shooting to start in Chennai on 5th with Pooja

இந்நிலையில் படத்தில் ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் இவர்களுடன் பகத் பாசிலும் இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்தப் படம் மிகப்பெரிய மெசேஜூடன் ரசிகர்களை கவரும் படமாக அமையும் என்று தெரிவித்துள்ளார். விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ள ரஜினிகாந்த், சூட்டிங்கில் பங்கேற்பதற்காக தன்னுடைய பயணத்தை துவங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

படத்தின் முதல்கட்ட சூட்டிங் திருவனந்தபுரத்தில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முன்னதாக 5ம் தேதி இந்தப் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டு உடனடியாக சென்னையில் சூட்டிங் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மஞ்சு வாரியருக்கு சமீபத்தில் லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு அவர்களது லுக் இறுதி செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X