ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் சென்சார் நிறைவு.. ரன்டைம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வேட்டையன் ஃபீவரில் ரசிகர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஜூரம் போக வேண்டுமென்றால் படத்தின் ரிலீஸ் வரை காத்திருக்க வேண்டும்.
இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்களிடையே அதிகமாக உள்ள நிலையில், படக்குழுவினரும் தங்களது பங்கிற்கு அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து அதை மேலும் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் சென்சார் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் படத்தை இயக்கியுள்ளார் டிஜே ஞானவேல். முன்னதாக அவரது ஜெய் பீம் படம் கொடுத்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரஜினி -டிஜே ஞானவேல் கூட்டணியும் இணைந்துள்ள நிலையில், வேட்டையன் படம் தாறுமாறான எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினி -அமிதாப்பச்சன் கூட்டணியும் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளது. மேலும் இவர்களுடன் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி, ராணா, பகத் ஃபாசில், கிஷோர் உள்ளிட்ட நட்சத்திரங்களும் படத்தில் இணைந்துள்ளனர்.
சென்சார் நிறைவு: வேட்டையன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் இநதப் படத்திற்கு வேறு லெவலில் பிரமோஷன்களை கொடுத்து வருகிறது. இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் அடுத்தடுத்த பேட்டிகளையும் ரஜினியுடன் இணைந்த உற்சாகத்தையும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் சென்சார் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரன்டைம் 2 மணிநேரம் மற்றும் 43 நிமிடங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வேட்டையன் பட ரன்டைம்: இதனிடையே இந்தப் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை பகிர்ந்ததாகவும் படத்தின் சக்சசை உறுதிப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் ரஜினியுடன் இணைந்து ஏராளமான நடிகர், நடிகைகள் உள்ள போதிலும் படம் 2.43 மணிநேரங்கள் மட்டுமே ரன்டைமாக உள்ளதும் ரசிகர்களை மிகப்பெரிய ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது. படத்தில் எஸ்பியாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில் முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு டீசரும் வெளியானது.
வேட்டையன் ட்ரெயிலர்: இந்நிலையில் வரும் அக்டோபர் 2ம் தேதி வேட்டையன் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே படத்தின் 3வது சிங்கிளும் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் வெளியாகியுள்ள இரு பாடல்களும் அதிரடி சரவெடியாக அமைந்துள்ள நிலையில் 3வது பாடல் மெலடியாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











