சும்மா சரவெடியா வர்றாங்களே.. ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் ரித்திகா சிங் கேரக்டர் இதுதானா!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் படத்தை ஜெய் பீம் புகழ் டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார்.

படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் ஜெயிலர் படத்தை போலவே அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த 9ம் தேதி வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மாஸாக அமைந்துள்ளது.

rajinikanth ritika singh tamil cinema

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை ஜெய் பீம் என்ற மாஸான படத்தை கொடுத்திருந்த டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இந்தப் படத்திலும் ஜெயிலர் படத்தை போலவே மாஸான பாடல்களையும் பின்னணி இசையையும் அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முத்தாய்ப்பாக கடந்த 9ம் தேதி வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அமைந்துள்ளது. சில தினங்களிலேயே இந்தப் பாடல் மில்லியன் கணக்கில் வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் பாடல்களில் முக்கியமான இடத்தை இந்தப் பாடல் பிடித்துள்ளது.

அடுத்தடுத்த பிரமோஷன்கள்: இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் இசை வெளியீடு வரும் 20ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாக லைகா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் ரிலீசாகவுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் பேட்ச் வேலைகள் சில மீதமுள்ளதாகவும் தற்போது விசாகப்பட்டினத்தில் கூலி படத்தின் சூட்டிங்கில் ரஜினிகாந்த் உள்ள நிலையில், அங்கேயே இந்த பேட்ச் வேலைகளை நடத்த வேட்டையன் டீம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிரடி காட்டும் ரித்திகா சிங்: முன்னதாக இந்தப் படத்தின் அடுத்தடுத்த கேரக்டர்களை அறிமுகப்படுத்த உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த அறிமுகம் அடுத்த ஒரு வாரத்திற்கு நடக்கவுள்ளதாகவும் கூறியிருந்த நிலையில், தற்போது படத்தில் ரித்திகா சிங்கின் கேரக்டரை அறிமுகம் செய்துள்ளது. வேட்டையன் படத்தில் ரூபா என்ற கேரக்டரில் ரித்திகா சிங் நடித்துள்ளார். அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில், ரஜினிகாந்துடனான அவரது காம்பினேஷன் காட்சியும் இந்த வீடியோவில் காணப்படுகிறது. இந்த வீடியோவில் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு காணப்படுகிறது.

எதிர்பார்ப்பில் வேட்டையன் படம்: கடந்த ஆண்டில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில், அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் அவர் நடித்திருந்த லால் சலாம் படம் சரியாக கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் அவர் நடித்துள்ள வேட்டையன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தப்படம் லைகா நிறுவனத்திற்கும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X