TJ Gnanavel: வேட்டையன் நிறைவுக்கு முன்னதாகவே அடுத்தப்படத்தில் கமிட்டான ஞானவேல்.. யார் ஹீரோ தெரியுமா?

மும்பை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா டகுபாட்டி, ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் வேட்டையன் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வரும் சூழலில் இந்த படத்தை விரைவில் நிறைவு செய்துவிட்டு அடுத்த படத்தில் டிஜே ஞானவேல் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படம் வரும் தீபாவளியையொட்டி அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். படத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்துள்ள சூழலில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Actor Rajinikanth s Vettaiyan movie director TJ Gnanavel going to join Actor Nani in his next

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் டிஜே ஞானவேல். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படம் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் ஓடிடியில் வெளியான போதிலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சிறப்பான அனுபவத்தை கொடுத்தது. தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார் டிஜே ஞானவேல். போலி என்கவுண்டருக்கு எதிரான படம் வேட்டையன் என்று கூறப்பட்டுள்ளது. இதே போல கல்வியில் நடந்து வரும் ஊழல் குறித்தும் இந்த படம் பேசுவதாக கூறப்பட்டுள்ளது.

வில்லனாக ராணா: இந்தப் படத்தில் மிகப்பெரிய அளவில் வில்லனாக ராணா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாதத்திற்குள்ளாக இந்த படத்தின் சூட்டிங் ஒட்டுமொத்தமாக நிறைவடைய உள்ளதாக டிஜே ஞானவேல் தெரிவித்துள்ளார். தற்போது மும்பையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இதில் நடிகர் அமிதாப் பச்சன் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி அவர் நடிகர் ரஜினிகாந்தை இன்றைய தினம் சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துள்ளதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக ராணா கேரக்டரில் நடிக்க பிரபல தெலுங்குப்பட நடிகர் நானியை டிஜே ஞானவேல் அணுகினார்.

நானியுடன் இணையும் ஞானவேல்: இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்த சூழலில் டேட்ஸ் இல்லாததால் அவரால் இந்த படத்தில் கமிட்டாக முடியவில்லை. இந்நிலையில் அப்போது ஏற்பட்ட நட்பில் டிஜே ஞானவேல் நானிக்கு ஒரு கதையை சொன்னதாகவும் அது அவரை மிகப்பெரிய அளவில் கவர்ந்த சூழலில் அந்த படத்தில் நடிக்க அவர் ஓகே சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை ஞானவேல் விரைவில் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரஜினியின் வேட்டையன் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக நானி லீட் கேரக்ட்ரில் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் டிஜே ஞானவேல்.

கமர்ஷியல் பாணியில் ஞானவேல்: தான் நடிக்கும் படங்களில் தன்னுடைய நடிப்பை மிக சிறப்பான வகையில் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நானி. அந்த வகையில் தன்னுடைய படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் டிஜே ஞானவேல் என்பதால் இவர்களின் காம்பினேஷன் மிகச் சிறப்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வேட்டையன் படத்தில் டிஜே ஞானவேல் மசாலா கலவையில் ரஜினியை வைத்து பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தில் அதற்கான அம்சங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X