ரஜினிகாந்த்: வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல்.. மஞ்சு வாரியருடன் சூப்பர் ஆட்டம் போட்ட ரஜினிகாந்த்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ளது வேட்டையன். வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக வேட்டையன் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஜினிகாந்துடன் ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
சூர்யாவின் ஜெய் பீம் படத்தை கொடுத்திருந்த டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது வேட்டையன் படம். இந்தப் படத்தில் ரஜினிக்கு அதிகமான ஆக்ஷன் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. லைகா நிறுவனத் தயாரிப்பாக உருவாகியுள்ள வேட்டையன் படம் மிகப்பெரிய ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அவரது 170வது படமாக உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அமிதாப்பச்சன், பகத் ஃபாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் படத்தை இயக்கியுள்ளார் டிஜே ஞானவேல். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான ஜெய் பீம் படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்ற நிலையில், வேட்டையன் படமும் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் -அனிருத் காம்பினேஷன்: முன்னதாக ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ள நிலையில், தற்போது வேட்டையன் படமும் அந்த லிஸ்ட்டில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு அந்தப் படத்தின் அதிரடி சரவெடியான பாடல்களும் முக்கியமான காரணமாக அமைந்தது. அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் -அனிருத் காம்பினேஷன் மீண்டும் வேட்டையன் படத்திலும் இணைந்துள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் மொத்தமாக ஒரு மாதம் உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்: தற்போதே படத்தின் பிரமோஷன்களை லைகா நிறுவனம் துவங்கியுள்ளது. அந்த வகையில் படத்தின் முதல் சிங்கிள் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது. முன்னதாக இந்தப் பாடலின் ரிலீசை பிரமோ மூலம் படக்குழு அறிவித்த நிலையில் அப்போதே ரசிகர்களின் வைப் துவங்கி விட்டது. இந்நிலையில் தற்போது பாடல் வெளியாகியுள்ளது. பாடல் மிகப்பெரிய உற்சாக கொண்டாட்டத்துடன் உருவாகியுள்ளது. லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள மனிசிலாயோ பாடலில் ரஜினிகாந்துடன் மஞ்சு வாரியர், அனிருத் உள்ளிட்டவர்களும் இணைந்து ஆட்டம் போட்டுள்ளனர். இந்த ஆண்டின் மிகப்பெரிய கொண்டாட்ட பாடலாக மனசிலாயோ பாடல் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
27 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த கூட்டணி: இந்தப் பாடலை 27 ஆண்டுகளுக்கு பிறகு மலேசியா வாசுதேவன் ரஜினிக்காக பாடியுள்ளார். ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்தப் பாடலை படக்குழுவினர் உருவாக்கியுள்ளார். மிகச்சிறப்பாக அமைந்துள்ளது பாடல். சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு இடவன் ஆகியோர் இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதியுள்ள நிலையில் மலேசியா வாசுதேவன் குரலுடன் யுகேந்திரன், அனிருத், தீப்தி சுரேஷ் ஆகியோரும் இந்தப் பாடலை பாடியுள்ளனர். முன்னதாக தேவரா படத்தின் பாடல்கள் மூலமாகவும் ரசிகர்களை கொண்டாட செய்துள்ள அனிருத்திற்கு வேட்டையன் படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.


Click it and Unblock the Notifications











