அடுத்த அதிரடி சரவெடி கிளம்பியாச்சு.. வேட்டையன் படத்தின் அடுத்த கேரக்டர் வீடியோ.. யாருன்னு பாருங்க!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் 34 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ள படம் வேட்டையன். இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களுக்கு குறைவில்லாமல் அடுத்தடுத்து விஷயங்களை களமிறக்கி வருகிறது லைகா நிறுவனம்.
இது ஒருபுறம் இருக்க, படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அடுத்தடுத்த பேட்டிகளை வேட்டையன் படத்திற்காக கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சும்மா இருக்காமல் படத்தில் கேரக்டர்களின் வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது தயாரிப்புத்தரப்பு. இந்த வீடியோக்களை பார்க்கும்போது படம் குறித்த மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படம் ரிலீசாக இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரொமோஷன்களால் லைகா நிறுவனம் ரசிகர்களை திண்டாட செய்து வருகிறது. படத்தை இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கியுள்ள நிலையில், படத்தில் ரஜினிகாந்துடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தின் கேரக்டர் வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு வரும் லைகாவிற்கு படம் ரிலீசாகும் வரையில் அது தொடரும் என்று தோன்றுகிறது.
கேரக்டர் வீடியோக்கள்: அடுத்தடுத்து துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ரித்திகா சிங், பகத் ஃபாசி, ராணா உள்ளிட்டவர்களின் கேரக்டர் வீடியோக்கள் வெளியான நிலையில், இன்றைய தினம் வேட்டையன் படத்தில் நடிகர் கிஷோரின் கேரக்டர் வீடியோ வெளியாகி உள்ளது. படத்தில் எஸ்பியாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளார் ரஜினிகாந்த். அவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மாறுவதற்கான பிளாஷ் பேக் மிகவும் அழுத்தமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் நடிகர் கிஷோரும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தில் அவரது கேரக்டர் பெயர் ஹரீஷ்.
கிஷோர் கேரக்டர் வீடியோ: அதிரடி சரவெடியாக நடிகர் கிஷோரின் கேரக்டர் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. எப்போதுமே கம்பீரம் குறையாத நடிப்பிற்கு சொந்தக்காரராக இருப்பவர் கிஷோர். இந்தப் படத்திலும் அதை அவர் சிறப்பாக வெளிப்படுத்துவார் என்பதற்கு இந்த கேரக்டர் வீடியோவே சாட்சி. மிரட்டலான கெட்டப்புடன் அவர் இந்த கேரக்டரில் காணப்படுகிறார். இந்த வீடியோவை பார்க்கும்போது, கிஷோருக்கு வேட்டையன் படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது.
இயக்குநர் டிஜே ஞானவேல்: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. இடையில் லால் சலாம் சொதப்பிய நிலையில், தற்போது வேட்டையன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படத்தை முன்னதாக ஜெய்பீம் என்ற சிறப்பான படத்தை கொடுத்து மிகச்சிறப்பான கவனத்தை பெற்றிருந்த டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் ரஜினியின் இமேஜை மாற்றாமல் தான் படத்தை இயக்கியுள்ளதாக கூறியுள்ளார் அவர். மேலும் ரஜினியின் நடிப்பின் பரிணாமங்களை வேட்டையன் படத்தில் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











