சொடக்கு போட்டா சம்பவம்தான்.. ரஜினியின் வேட்டையன் பட அதிகாரப்பூர்வ வசூல்.. அறிவித்த லைகா நிறுவனம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் லைகா நிறுவன தயாரிப்பாக கடடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. ரஜினியுடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ராணா, பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் அதிகப்படியான பிரமோஷன்களுடன் இந்தப் படம் வெளியானது. ஆயுதபூஜை விடுமுறையையொட்டி வேட்டையன் படம் திரையரங்குகளில் முற்றுகையிட்ட நிலையில், அதிகமான ரசிகர்களும் படத்தை பார்க்க திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். படம் வசூலில் சிறப்பான சம்பவத்தை செய்து வருகிறது.

rajinikanth vettaiyan moviue lyca productiions

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது வேட்டையன் படம். இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா, பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் மட்டுமில்லாமல் மிகப்பெரிய பிரமோஷனுடனும் ரிலீசானது. படத்தின் ரிலீசுக்கு முன்னதாக அடுத்தடுத்து வேட்டையன் ஃபீவர் மட்டுமே ரசிகர்களிடையே காணப்பட்டது. அந்த அளவிற்கு படத்தின் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டனர்.

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்தும் அவ்வப்போது படம் குறித்த அப்டேட்களை கொடுத்து வந்த நிலையில், படம் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 10ம்தேதி திரையரங்குகளில் வெளியான வேட்டையன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இருந்தபோதிலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. படம் போலி என்கவுண்டருக்கு எதிரான கருத்துக்களை கதைக்களமாக கொண்டிருந்த நிலையில், படம் சிறப்பான படமாக அமைந்தது. ஆயினும் ரஜினி ரசிர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனத்தையும் வேட்டையன் படம் எதிர்கொண்டது.

ஃபேன் பாய் சம்பவம் செய்த அனிருத்: படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தின் மனசிலாயோ, ஹண்டர் வண்டார் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் ஒட்டுமொத்த பாடல்களையும் இன்றிரவு வெளியிட உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார். படத்திற்காக மொத்தம் 9 பாடல்களை உருவாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். ரஜினிக்கு இசையமைப்பது என்றாலே ஃபேன் பாயாக மாறி சிறப்பான இசையை கொடுத்து வருகிறார் அனிருத். அந்த வகையில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தது.

வேட்டையன் அதிகாரப்பூர்வ வசூல்: இந்தப் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் 5வது நாளாக வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை தற்போது படத்தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. படம் இதுவரை 240 கோடி ரூபாய்களை சர்வதேச பாக்ஸ் ஆபீசில் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்டை தொடர்ந்து வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியான நிலையில், தொடர்ந்து வார நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X