Rajinikanth: பாண்டிச்சேரியில் சூட்டிங் முடித்த வேட்டையன் டீம்.. அடுத்ததாக எங்கே தெரியுமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் இன்றைய தினம் பாண்டிச்சேரியில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் உடனடியாக சில தினங்களில் துவங்க உள்ள சூழலில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. போலி என்கவுண்டருக்கு எதிரான கருத்துக்களை கூறும் படமாக வேட்டையன் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ரஜினியின் கெட்டப் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. சென்னை, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள சூழலில் மும்பையில் நடைபெற்ற சூட்டிங்கில் நடிகர் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதன்போது இருவரும் இணைந்து வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த். அமிதாபச்சன். ராணா டகுபாட்டி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் வேட்டையன். டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்து முடிந்துள்ளன. மும்பையில் நடைபெற்ற சூட்டிங்கில் அமிதாபச்சன் -ரஜினிகாந்த் இணைந்து நடித்ததை பார்க்க முடிந்தது. அதன்போது அமிதாப்பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.
நிறைவடைந்த பாண்டிச்சேரி சூட்டிங்: இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் இன்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த், ரித்திகா சிங், ராணா உன்கிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இதையடுத்து மே 13ம் தேதி உடனடியாக இந்த படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் துவங்க உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கோகுலம் ஸ்டுடியோவில் இந்த ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் இதற்கான செட் வேலைகள் முன்னதாகவே நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்ய டிஜே ஞானவேல் திட்டமிட்டுள்ளார்.
கூலி படத்தில் ரஜினிகாந்த்: இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ள கூலி படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சூழலில் இந்த டீசரில் பயன்படுத்தப்பட்டுள்ள பாடல்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. போலி என்கவுண்டருக்கு எதிராகவும் கல்வியில் நடந்து வரும் ஊழல்கள் குறித்தும் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரஜினி -அமிதாப் காம்பினேஷன்: இந்தப் படத்தில் 30 ஆண்டுகளை கடந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமிதாபச்சன் இணைந்துள்ள சூழ்நிலையில் இவர்கள் இருவரின் காம்பினேஷன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனிடையே வரும் மே 13ம் தேதி சென்னையில் துவங்கவுள்ள சூட்டிங்குடன் ரஜினிகாந்த் படத்தில் தன்னுடைய ஒட்டுமொத்த போர்ஷன்களையும் முடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











